Mission Chapter 1 Making Video: மிஷன் சாப்டர் 1 பட மேக்கிங் வீடியோ வெளியீடு
Mission Chapter 1 Making Video
அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் பிளாக் படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் மிஷன் சாப்டர் ஒன். இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியாகியுள்ளது.
அருண் விஜய் ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், சில படங்களில் மட்டுமே நடித்தார், 2001ல் வெளியான பாண்டவர் பூமி அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் இயற்கை, ஜனனம் போன்ற பல படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012-ம் ஆண்டு தடையற்ற தாக்க என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். சில ஆண்டுகள் கழித்து வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மீண்டும் ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்தார்.
பின்னர் செக்கச் சிவந்த வானம், ஓ மை டாக், சினம், யானை போன்ற படங்களில் நடித்தார். இவர் தற்போது பார்டர், மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே, வணங்கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே, இது ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் நிறைந்த படமாகும். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். சுபாஷ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்லும் ஒரு இந்தியன் சிறையில் அடைக்கபடுகிறான். பிறகு அவர் எப்படி சிறையிலிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் முக்கியக் கதை. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் படக்குழுவினர் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1 நிமிடம் 4 வினாடிகளில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சிகளில் அருண் விஜய் ஒரு 100 பேருடன் சண்டை செய்வது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.