Mission Chapter 1 Review : மிஷன் சாப்டர் 1 படத்தின் திரை விமர்சனம்

Mission Chapter 1 Review :

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஹாலிவுட் படங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு ஏற்ப இயக்கி வந்த ஏ.எல்.விஜய் இந்த படத்திலும் பிரிசன் படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்.

அருண் விஜயின் வணங்கான் திரைப்படம் இந்த பொங்கலுக்கு வரவில்லை என்றாலும் இந்த மிஷன் சாப்டர் 1 படத்தை தந்து தனது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார். பொங்கல் போட்டி பலமாக உள்ள நிலையில் அருண் விஜய் படத்துக்கு வசூல் எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தாண்டவம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் என பல படங்கள் ஹாலிவுட் படங்களின் பாதிப்பு தான். இந்நிலையில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆக்‌ஷனில் மிரட்டும் இந்த படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை (Mission Chapter 1 Review) பார்க்கலாம்.

மிஷன் சாப்டர் 1 படத்தின் கதை :

லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் இந்த படத்தில் அருண் விஜய்க்கு மகளாக நடித்துள்ளார். அவருக்கு உடம்பில் ஒரு பெரிய பாதிப்பு அதை சரி செய்வதற்கு பணம் தேவைப்படும் நிலையில் அருண் விஜய் தன் மகள் ஆப்ரேஷன் ஒன்றிற்காக தன் வேலையை விட்டுட்டு ஹவாலா மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு லண்டன் செல்கிறார். அங்கு ஒரு மருத்துவமனையில் அருண் விஜய் வைத்திருக்கும் ஹவாலா பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் திருட முயற்சிக்கிறார். அந்த திருட்டை தடுக்கும் முயற்சியில் வெளிநாட்டில் தவறுதலாக போலீஸாரை அடித்து அருண் விஜய் சிறைக்கு செல்கிறார். இஸ்லாமிய தீவிரவாதியான உமர் பாய் சிறையில் இருக்கும் சிலரை மீட்க முயற்சிக்கிறார் அதை தடுக்க போராடும் எமி ஜாக்சனுக்கு துணையாக நிற்கிறார் அருண் விஜய். கடைசியில் தீவிரவாதிகளின் சதியை முறித்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா? என்பது படத்தின் தான் மீதிக்கதை.

அருண் விஜய் தமிழ் சினிமாவின் மிக கம்பீரமான கதாநாயகன் என்று மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தன் மகளை குணப்படுத்த வேண்டும் என்ற பரிதவிப்பு, பின் தீவிரவாதிகளை தப்பிக்க விட கூடாது என்ற ஆக்ரோஷம் என படத்தில் சிக்ஸர் அடித்துள்ளார். மிஷன் சாப்டர் 1 படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சி தான். அதிலும் ஜெயிலுக்குள் கைதிகள் அனைவரும் வெளியே தப்பிக்க முயற்சி செய்ய அதை தடுக்க அருண் விஜய் போடும் சண்டை காட்சி மிரட்டல். எமி ஜாக்சன் தன் பங்கிற்கு ஆக்‌ஷனில் ஆங்கங்கே தலை காட்டுகிறார். அதே நேரத்தில் படத்தில் ஒரு சில காட்சிகள் அப்படியே விஸ்வரூபம் படத்தை நியாபகப்படுத்துவது தவிர்க்க முடியவில்லை. அதோடு வில்லன் பெயர் கூட விஸ்வரூபம் படத்தின் வில்லன் பெயர் தான் அவரையும் எல்லோரும் உமர் பாய் என்றே அழைக்கின்றனர். டெக்னிக்கலாம் மிகவும் பலமாக உள்ளது. குறிப்பாக அந்த ஜெயில் சண்டைக்காட்சியில் வரும் ஏரியல் ஷாட் ரசிக்க வைக்கிறது. அருண் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் ஆக்‌ஷன் பிரியர்களை நிச்சயம் இந்த மிஷன் சாப்டர் 1 படம் (Mission Chapter 1 Review) கவரும்.

Latest Slideshows

Leave a Reply