Mitchell Marsh Birthday : பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பரிசு | மிட்செல் மார்ஷ் ருத்ர தாண்டவம்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து தனது பிறந்தநாளை (Mitchell Marsh Birthday) கொண்டாடினார். உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது. டாஸ் வென்ற பிறகு பாகிஸ்தான் அணி முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதன் பின் டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியது. முதல் 7 ஓவர்களில் அமைதி காத்த இருவரும் ஹாரிஸ் ராஃப் வீசிய 8வது ஓவரில் தாக்குதலைத் தொடங்கினர். குறிப்பாக ராஃப் பந்துவீச்சில் மட்டும் மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரிகள் அடித்தார். அதன்பின், ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடித்த மிட்செல் மார்ஷ், 40 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்தார்.

Mitchell Marsh Birthday :

இதையடுத்து மிட்செல் மார்ஷின் அதிரடி ஆட்டம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. குறிப்பாக உசாமா மிர் பந்துவீச்சை பார்த்து சிக்ஸர் அடித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருந்தது. இருப்பினும், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிட்செல் மார்ஷை கொஞ்சம் திணறடித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் தாக்குதலுக்கு கொண்டு வந்த அவர் உடனடியாக ஒரு சிக்ஸர் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 30வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. அதன் பின் டேவிட் வார்னர் ஒருபுறம் சதம் அடிக்க, அடுத்த பந்திலேயே மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார்.

தனது 32வது பிறந்தநாளை கொண்டாடும் (Mitchell Marsh Birthday) மிட்செல் மார்ஷ், தனது பிறந்தநாளில் தனது ரசிகர்களுக்கு சதமடித்து பரிசளித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பிறந்தநாளில் சதம் (Mitchell Marsh Birthday) அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் மிட்செல் மார்ஷ் பெற்றார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மிட்செல் மார்ஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் சிறப்பாக விளையாடி 108 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.

Latest Slideshows

Leave a Reply