MLC 2023 LAKR vs MINY: 50 ரன்னில் ஆல் அவுட்.. ஆர்சிபி சாதனை தப்பியது.. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அபார வெற்றி!

நேற்று நடந்த போட்டியில் நியூயார்க் அணியும் நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் விளையாடிய அந்த நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

பெங்களூரு அணியின் ரெக்கார்டு :

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை போன்று அமெரிக்காவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்களே இந்த அணிகளுக்கும் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு IPL போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு அணி 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த சம்பவம் தற்போது வரை அனைத்து ரசிகர்களும் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூரு அணி ரசிகர்கள் பெரும் மன உளைச்சலை சந்திக்க இது முக்கிய காரணமாகும். அது மட்டும் அல்லாமல் எந்த அணி மோசமாக அவுட் ஆனாலும் அவர்கள் 49 ரன்களை தாண்ட வேண்டும் என அனைவரும் கிண்டல் செய்து வருகின்றனர். அப்படியே ஒரு சம்பவத்தை நேற்று சந்தித்த நைட் ரைடர்ஸ் அணி எதிர்பாராத விதமாக ஒரு ரன் அதிகமாக அடித்து தப்பித்தது.

அமெரிக்க மேஜர் லீக் தொடரில் நியூயார்க் அணியை எதிர்த்து நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூயார்க் அணி 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணி வீரர் டிம் டேவிட் அதிரடியாக ஆடி 48 ரன்கள் குவித்தார். இதை அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பந்துவீச்சை கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. ரபடா, போல்ட் என அனைவரும் திணறடித்தனர். அந்த அணியில் உன்முக்த் சந்த் அவர் மட்டும் ஓரளவுக்கு விளையாடினார். இதனை அடுத்து வந்த ஒரு வீரர் கூட இரட்டை இலக்கை எடுக்கவில்லை. இது போன்ற மோசமான கிரிக்கெட் விளையாடியது அந்த அணி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

பெங்களூரு அணி ரசிகர்கள் குஷி :

இதன் மூலம் நியூ யார்க் அணி அடித்த சுமாரான ஸ்கோரை சுருக்கி அபார வெற்றி பெற்றது. இந்த நைட் ரைடர்ஸ் அணியின் ஓனர்கள் நம்ம ஐபிஎல் இன் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களாகும். இதனால் சமூக வலைதளங்களில் பெங்களூரு அணி ரசிகர்கள் கொல்கத்தா ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். நேற்று நடந்த போட்டியில் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply