Modi Inquired About Rajini's Health : ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் தற்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து வரும் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் மோடி ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்திடம் கைபேசியில் தொடர்புகொண்டு (Modi Inquired About Rajini’s Health) விசாரித்தார்.

Modi Inquired About Rajini's Health - உடல் நலம் விசாரித்த பிரதமர் மோடி :

நடிகர் ரஜினிகாந்த் 30.10.2024 அன்று திடீரென நள்ளிரவில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிக்கு இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாயில் வீக்கம் இருந்தது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரஜினிக்கு செய்யப்பட்ட இந்த இதய சிகிச்சையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளதாகவும், ரஜினி ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிவிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினியின் உடல்நிலை குறித்து ரஜினியின் மனைவி லதாவிடம் கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் (Modi Inquired About Rajini’s Health) விசாரித்தார். அப்போது பேசிய மோடி அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினிகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிராத்திப்பதாக கூறியுள்ளார். இந்த செய்தியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குணமடைந்து 2 நாட்களில் வீட்டு திரும்பும் ரஜினி :

ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை முடிந்த பிறகு ரஜினி மயக்கத்தில் இருந்து கண் திறந்ததுக்கு அப்புறம் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். உடல் முன்னேற்றம் அடைந்த பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை சார்பாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன் ரஜினிக்கு மூளையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply