Modi Sami Darshan At Srirangam Temple : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

Modi Sami Darshan At Srirangam Temple :

பிரசித்தி பெற்ற 108 வைணவத்தலங்களுள் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் மோடி (Modi Sami Darshan At Srirangam Temple) என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை தமிழகம் வந்த பிரதமர், சென்னையில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழக பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தின் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சக்கரை சாலைக்கு சென்று சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலை தரிசனம் செய்தார். அங்கு காலை 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளிலும்,   சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்ட ராமர், ராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் யானையான ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு வாய் உறுப்பு வாசித்து காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார்.

சாமி தரிசனத்தின் போது பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு, மதியம் 2.30 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பிரதமர் சாமி தரிசனம் செய்ய சாலை வழியாக வந்தபோது, ​​சாலைகளின் இருபுறமும் மக்கள் திரண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமமேஸ்வரம் கோயிலுக்கு பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நபராக இருந்து தலைமை தாங்கி விழாவை நடத்த உள்ளார். இதை முன்னிட்டு 11 நாட்களாக விரதம் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமாயணம் தொடர்பான கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து வருகிறார். அதன்படி இன்று ராமரும் சீதையும் வழிபட்ட கோவிலாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபட்டார். இதையடுத்து பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்று அங்குள்ள ராமநாத சுவாமியை வழிபட உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply