Mohammed Shami Bowling : முதல் பந்திலேயே தெறிக்கவிடப்பட்ட ஸ்டம்ப்...

உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் முகமது ஷமி (Mohammed Shami Bowling) வீசிய முதல் பந்திலேயே ஸ்டம்பை சிதறடித்து விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். கடந்த 4 போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, நீண்ட பேட்டிங் வரிசை தேவை என்பதால் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் பாண்டியாவை இரண்டாம் நிலை வேகப்பந்து வீச்சாளர்களாக பயன்படுத்தினார்.

ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா வெளியேறினார். இதன் காரணமாக ஷர்துல் தாக்கூர் 9 ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஷர்துல் தாக்கூரின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா வெளியேறியதால், ஷர்துல் தாக்கூரையும் பெஞ்ச் செய்துள்ளார் ரோஹித் சர்மா.

அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் வழக்கம் போல் முதல் ஸ்பெல்லை வீசினர். இருவரும் தலா 4 ஓவர்கள் வீசிய நிலையில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. பின்னர் 9வது ஓவரை வீச முகமது ஷமி (Mohammed Shami Bowling) அழைக்கப்பட்டார்.

Mohammed Shami Bowling :

நடப்பு உலக கோப்பை தொடரில் முகமது ஷமி தனது முதல் ஓவரை வீச வந்ததால், ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது. முதல் பந்திலேயே வழக்கம் போல் பந்தின் சீமில் சிக்கியதால் ஸ்டம்புகள் சிதறிய நிலையில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் பந்திலேயே முகமது ஷமி (Mohammed Shami Bowling) விக்கெட் வீழ்த்தியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனால், இத்தனை நாட்களாக முகமது ஷமியை இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியில் சேர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை தொடரில் 32 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி 2வது இடத்திற்கு (Mohammed Shami Bowling) முன்னேறியுள்ளார். ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர்கான் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply