Mohammed Shami : உலக கோப்பையில் முகமது சமி நிச்சயம் விளையாட வேண்டும்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. விளையாடும் பதினொன்றில் யாரை சேர்க்க வேண்டும்? எத்தனை பேட்ஸ்மேன்கள் இடம்பெற வேண்டும்? எத்தனை பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohammed Shami :

இந்த நிலையில் இந்திய அணியில் எட்டாவது வீரராக சர்துல் தாக்கூரை சேர்த்து பேட்டிங்கை பலப்படுத்தும் முயற்சியில் ரோகித் சர்மா ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக Mohammed Shami அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அந்த போட்டியில் சர்துல் தாக்கூர் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சுரேகர், இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளனர் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

அணியில் உள்ள வீரர்களின் முதன்மையான திறமையே விளையாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கள் பேட்டிங் வரிசையில் ஜடேஜா ஏழாவது இடத்தில் இருப்பதால் கூடுதல் ஆல்-ரவுண்டரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. லோயர் ஆர்டரில் ஜடேஜா இருப்பதே பேட்டிங்கிற்கு போதுமானது. பேட்டிங்கிற்காக நமது பந்துவீச்சின் தரத்தை தியாகம் செய்யக்கூடாது. ஏனெனில் Mohammed Shami போன்ற ஒரு வீரர் வெளியே உட்கார வேண்டும்.

நான் அப்படி ஒரு முடிவை எடுக்கவே மாட்டேன். ஆனால் அணி நிர்வாகம் சர்துல் தாக்கூருக்கு முன்னுரிமை கொடுக்கும் என நினைக்கிறேன். அதேபோல், நீங்கள் இசான் கிசானுக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் தனது திறமையை நிரூபித்துவிட்டார். கே.எல்.ராகுல் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

காயத்திலிருந்து ஒரு வீரரை உடனடியாக பெரிய லீக்குகளுக்குத் திரும்பப் பெறுவதும், தற்போது ஃபார்மில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் எப்போதுமே ஆபத்துதான். நீங்கள் சிறந்த வீரரா? நான் சிறந்த வீரர் என்ற பேச்சுக்கே இடமில்லை, நடைமுறை முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply