ஜிம்பாப்வே விக்டோரியா நீர்வீழ்ச்சி அருகே Mosi-oa-Tunya International Cricket Stadium

இயற்கை எழில் கொஞ்சும் ஜிம்பாப்வே விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகில் கிரிக்கெட் ஸ்டேடியம் - ICC நிதியளித்த திட்டம் :

ஜிம்பாப்வே நாட்டில் விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு அருகே Mosi-oa-Tunya International Cricket Stadium ஆனது 10,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட இருக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு புதிய மைதானம் கட்டுவதற்கு ICC நிதியளிக்கிறது. இது ஒரு புதிய மல்டி-ஸ்போர்ட் ஸ்டேடியமாக அமைய உள்ளது. உலகின் மிக அழகான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக ‘Mosi-oa-Tunya’ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த ஸ்டேடியம் ஆனது பல விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்கும், கிரிக்கெட் தவிர ரக்பி, ஹாக்கி மற்றும் நெட்பால் போன்றவையும் இந்த மைதானத்தில் விளையாடப்படும் வகையில் இம்மைதானம் ஆனது சிறப்பாக அமைக்கப்பட இருக்கிறது.

Mosi-oa-Tunya International Cricket Stadium பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன :

ஜிம்பாப்வே நாட்டு அரசாங்கம் இந்த திட்டத்திற்கு 10 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மனங்காக்வா இந்த கிரிக்கெட் ஸ்டேடிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். ஜனாதிபதி மனங்காக்வா, “ஜிம்பாப்வே நகரத்தில் இந்த மைதானத்தின் அமைவிடம் ஆனது சுற்றுலாத் துறை இலக்குகளை விரைவாக அடைவதற்கும் மற்றும் “தேசிய வளர்ச்சி வியூக தரிசனம் 2030”-ல் ஜிம்பாப்வே கோடிட்டு காட்டியுள்ள ஜிம்பாப்வேயின் தேசிய வளர்ச்சி அபிலாஷைகளுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி பங்களிக்கும்” என்று அடிக்கல் நாட்டு விழாவில் கூறியுள்ளார். இந்த மைதானத்தின் மண் அள்ளும் பணிகளும் மற்றும் பிரதான ஆடுகளத்தை சமன் செய்யும் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் துளையிடப்பட்டு, ஒரு தளம் நிறுவப்பட்டு, ஒரு நீர் தேக்கமும் நிறுவப்பட்டு மற்றும் வசதிக்காக வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நல்ல முன்னேற்றம் உள்ளது.

இந்த மைதானத்தின் கட்டுமான செலவு ஆனது $5 முதல் $10 மில்லியன் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ICC ஆனது இந்த திட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட நிதியை தாண்டி கூடுதல் நிதி ஆனது வழங்கப்படாது என்று கூறியுள்ளது. Mosi-oa-Tunya International Cricket Stadium என்று பெயரிடப்பட உள்ள இந்த புதிய மைதானத்தில் 2026 மற்றும் 2027 இல் பல உலகளாவிய நிகழ்வுகளை நடத்த உள்ளது. 2027 ஆண்கள் உலகக் கோப்பையை இணைந்து நடத்தும் மற்றும் அதற்கு முன், நமீபியாவுடன் இணைந்து 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் அடுத்த பதிப்பையும் நடத்தும். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இரு நாடுகளுடன் இணையும் 2027 ODI உலகக் கோப்பையையும் நடத்தும்.

Latest Slideshows

Leave a Reply