Most Powerful Passports 2025 : உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல்

Passport ஆனது ஒரு குறிப்பிட்ட நாட்டில் விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும். உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளின் (Most Powerful Passports 2025) தரவரிசையை Henley Passport Index ஆனது அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசை ஆனது ஒரு குறிப்பிட்ட நாட்டில் பாஸ்போர்ட் ஆனது விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் அமெரிக்காவிடம் உலகின் வலிமையான பாஸ்போர்ட் ஆனது இல்லை.

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

சிங்கப்பூர் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 1-வது இடத்தில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் இடம் (Most Powerful Passports 2025) பெறுகிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் ஆனது விசா இல்லாமல் 195 இடங்களுக்குப் பயணிக்க அனுமதிக்கிறது. உலகின் மிகவும் வலிமையான அல்லது மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் ஆனது கருதப்படுகிறது.

ஜப்பான் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 2-வது இடத்தில் ஜப்பான் பாஸ்போர்ட் இடம் பெறுகிறது. ஜப்பானிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி விசா இல்லாமல் 193 இடங்களுக்குச் செல்ல முடியும்.

பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 3-வது இடத்தை பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா (Most Powerful Passports 2025) மற்றும் ஸ்பெயின் ஆகியவை Joint Share கூட்டாகப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 192 இடங்களுக்கும் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 4-வது இடத்தை ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை கொண்டுள்ளன. இந்த ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளில் ஏதேனும் ஒன்றின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 191 இடங்களுக்கும் விசா இல்லாமல் செல்ல முடியும்.

பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 5-வது இடத்தில் (Most Powerful Passports 2025) பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் உள்ளன. இந்த பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய 5 நாடுகளில் ஏதேனும் ஒன்றின் பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு 190 இடங்களுக்கு விசா இல்லாத அணுகல் கிடைக்கும்.

ஆஸ்திரேலியா, கிரீஸ் பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 6-வது இடத்தை ஆஸ்திரேலியாவும் மற்றும் கிரீஸ்ம் கூட்டாக பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா அல்லது கிரீஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பது 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கும்.

Most Powerful Passports 2025 - Platform Tamil

கனடா, மால்டா மற்றும் போலந்து பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 7-வது இடத்தை கனடா, மால்டா மற்றும் போலந்து ஆகிய மூன்று நாடுகள் பகிர்ந்து (Most Powerful Passports 2025) கொள்கின்றன. கனடா, மால்டா அல்லது போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம், 188 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

செக் குடியரசு மற்றும் ஹங்கேரி பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 8-வது இடத்தை செக் குடியரசு மற்றும் ஹங்கேரி பாஸ்போர்ட்டுகள் பெற்றுள்ளன. செக் குடியரசு அல்லது ஹங்கேரியின் பாஸ்போர்ட் 187 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும்.

அமெரிக்கா, எஸ்டோனியா பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 9-வது இடத்தை அமெரிக்கா மற்றும் எஸ்டோனியா பிடித்துள்ளன. அமெரிக்கா அல்லது எஸ்டோனியாவின் பாஸ்போர்ட் மூலம் 186 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

லாட்வியா, லிதுவேனியா, ஸ்லோவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாஸ்போர்ட்

Henley Passport Index தரவரிசையின்படி 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் தரவரிசையில் 10-வது இடத்தை (Most Powerful Passports 2025) லாட்வியா, லிதுவேனியா, ஸ்லோவேனியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாஸ்போர்ட்டுகள் பிடித்துள்ளன. இந்த நான்கு நாடுகளில் ஏதேனும் ஒன்றின் பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 185 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்தியா பாஸ்போர்ட்

சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசைப்படி, 85-வது இடத்தில் இந்தியாவின் பாஸ்போர்ட் உள்ளது. 57 இடங்களுக்கு மட்டுமே விசா இல்லாத அணுகல் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply