Moto G34 5G ஸ்மார்ட்போன் ஜனவரி 9-ம் தேதி பட்ஜெட் விலையில் அறிமுகம்

Moto G34 5G ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பெரிய டிஸ்பிளே தரமான சிப்செட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

மோட்டோ ஜி34 5ஜி சிறப்பம்சங்கள் (Moto G34 5G Specifications) :

  1. Moto G34 5G Display : இந்த போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் LCD  டிஸ்பிளேவைக் கொண்டு இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது.  120Hz ரெஃப்ரெஷ் ரேட் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 240Hz ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. இந்த ஸ்மார்ட்போன் Punch Hole Design மடலாகும். பெரிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 5G SoC) சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. Moto G34 5G Camera : இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போனில் 50MB மெயின் கேமரா + 2MB மேக்ரோ லென்ஸ் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவருகிறது. மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16MB கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.   இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

  3. Moto G34 5G Storage : இந்த போனில் 8GB RAM மற்றும் 128GB  ஸ்டோரேஜ் மற்றும் 16GB RAM + 256GB இரண்டு  வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. மோட்டோரோலா நிறுவனம் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

  4. Moto G34 5G Colors : ஸ்டார் பிளாக் (Star Black) மற்றும் சீ ப்ளூ (Sea Blue) ஆகிய இரண்டு கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speaker) கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) உள்ளது.

  5. Moto G34 5G Battery & Rate : 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன். இந்தியாவில் ரூ.11,990/- என்ற பட்ஜெட் விலையில் இந்த மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply