மோட்டோரோலா நிறுவனம் Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்கிறது

மோட்டோரோலா நிறுவனம் புதிய Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.  ஆன்லைனில் கசிந்த இந்த போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சிறப்பம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications) :

  1. Motorola Edge 50 Neo Display : இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் 6.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS கொண்ட 7300 ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் மாலி ஜி610 எம்சி3 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பிரியர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம் என மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  2. Motorola Edge 50 Neo Storage : 12GB RAM + 512GB மெமரி மற்றும் 16GB RAM + 1 TB மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் மோட்டோ நிறுவனம் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

  3. Motorola Edge 50 Neo Camera : இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனில் 50MB சோனி எல்ஒய்டி 700சி மெயின் கேமரா + 13 MB அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MB டெலி போட்டோ கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

  4. Motorola Edge 50 Neo Battery : இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் 68W டர்போபவர் (Turbo Power) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.

  5. Motorola Edge 50 Neo Rate : ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ரூ.32,000 என்ற விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply