Motorola Razr 50: மோட்டோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

மோட்டோ நிறுவனம் புதிய மோட்டோரோலா ரேசர் 50 (Motorola Razr 50) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 9-ம் தேதி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.

மோட்டோரோலா ரேசர் 50 சிறப்பம்சங்கள் (Motorola Razr 50 Specifications)

1. Motorola Razr 50 Display

இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவானது 3.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே மற்றும் 1700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.

2. Motorola Razr 50 Camera

இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போனில் 50MB பிரைமரி கேமரா + 13MB அல்ட்ரா வைடு கேமரா என்ற டூயல் ரியர் கேமரா  அம்சத்துடன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 32MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க முடியும் என மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. Motorola Razr 50 Storage

8GB RAM + 128GB மெமரி மற்றும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.  இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு மோட்டோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

4. Motorola Razr 50 Battery

இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் 5200 mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

5. Motorola Razr 50 Rate

இந்த மோட்டோரோலா ரேசர் 50 ஸ்மார்ட்போன் ரூ.47.000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply