Movies Coming Out September 27 2024 : செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்கள்

நடிகர் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் முதல் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா வரை நாளை (செப்டம்பர் 27) ஆம் தேதி வரை திரையரங்கில் வெளியாகும் (Movies Coming Out September 27 2024) திரைப்படங்களை தற்போது காணலாம்.

Movies Coming Out September 27 2024 - செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் படங்கள் :

மெய்யழகன் :

  • நடிகர் கார்த்தி நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மெய்யழகன். இப்படத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இளவரசு, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
  • கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் கார்த்தி மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் நாளை அதாவது செப்டம்பர் 27 ஆம் தேதி (Movies Coming Out September 27 2024) திரையரங்கில் வெளியாகிறது.

தேவரா :

  • பலரும் எதிர்பார்க்கப்பட்ட படமாக தேவரா உள்ளது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர். இப்படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
  • என்.டி.ஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசைமைத்துள்ளார். சைன் டாம் சக்கோ, பிரகாஷ் ராஜ், சைப் அலி கான், கலையரசன், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி (Movies Coming Out September 27 2024) திரையரங்கில் வெளியாகிறது. 

சட்டம் என் கையில் :

  • நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் நடிகர் சதிஷ். இவர் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் சட்டம் என் கையில். சிக்ஸர் திரைப்படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜய் ராஜ், வித்யா பிரதீப், சம்பதா, பாவெல் நவகீதன், ரித்விகா தமிழ்செல்வி, மைம் கோபி, பவா செல்வதுரை, கஜராஜ், வெண்பா ஆகியோர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதைக்களம் கொண்ட இப்படம் நாளை (Sep 27) வெளியாகிறது.

பேட்ட ராப் :

  • இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள படம் பேட்ட ராப். இதில் பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கு டி இமான் இசைமைத்துள்ளார். இப்படம் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என குடும்ப படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் நாளை (Sep 27) வெளியாக உள்ளது.

ஹிட்லர் :

  • வானம் கொட்டட்டும், படைவீரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தனா தற்போது இயக்கியுள்ள படம் தான் ஹிட்லர். இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன், ரோமியோ ஆகிய படங்கள் கவனம் பெறவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் ஹிட்லர் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply