Mr Zoo Keeper Movie Release Date : Mr Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நடிப்பில் உருவாகியுள்ள Mr.Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதியை (Mr Zoo Keeper Movie Release Date) அறிவித்துள்ளார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, அது இது எது ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்து பல ரசிகர்களுக்கு பிடித்தமானவர் நடிகர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளியின் அடுத்தடுத்த சீசன்களில் ஷிவாங்கி, பாலா போன்றோருடன் கோமாளியாக அவர் செய்யும் குறும்புகளில் மயங்காதவர்கள் இல்லை. சில சமயங்களில் ரசிகர்கள் அவரை கலாய்த்தாலும் இவரது சேட்டைகளை தொடர்ந்து ரசிக்கவே செய்தனர். தற்போது குக் வித் கோமாளியின் அடுத்த சீசனில் இணைந்துள்ளார். இதற்கான ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த நிகழ்ச்சி அவருக்கு அடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது. இதற்கிடையில் “Mr.Zoo Keeper” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் (Mr Zoo Keeper Movie Release Date) அப்டேட் வெளியாகியுள்ளது.

Mr Zoo Keeper Movie Release Date :

குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16, 1946 ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த புகழ், Mr.Zoo Keeper, துடிக்கிறது மீசை போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் Mr.Zoo Keeper படத்தின் ரிலீஸ் தேதி (Mr Zoo Keeper Movie Release Date) அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மே 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு முதன்முறையாக ஹீரோவாக தோன்ற உள்ளதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தனது வளர்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சுரேஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக நேர்காணல்களில், புலியுடன் இணைந்து நடித்த காட்சிகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இருப்பினும் இந்த படம் ரசிகர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply