MS Dhoni 42nd Birthday: செல்ல நாய்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய MS தோனி

சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அவரது பிறந்தநாளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சமகால கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். இதே போல் ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை பகிர்ந்தும், கட்அவுட் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் :

அதேபோல் எம்.எஸ்.தோனியின் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதுடன் திருவிழா போல் கொண்டாடினர். அதுமட்டுமின்றி ராஞ்சியில் உள்ள சில ரசிகர்கள் தோனியின் வீட்டின் முன்பு திரண்டனர். இதையறிந்த தோனி தனது வீட்டிற்கு வந்து ரசிகர்களை கை அசைத்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

இந்நிலையில், தோனியின் பிறந்தநாள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தோனியைப் பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் இதைச் சொல்கிறேன். ரசிகர்கள் அனைவரும் தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வரும் இந்த சூழலில் தோனி அதை ஆரவாரமின்றி எளிதாக கடந்து செல்வார் என பதிவிட்டிருந்தார்.

MS Dhoni 42nd Birthday தோனியின் க்யூட் வீடியோ :

இந்நிலையில் தோனி பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஹர்ஷா போக்லே பதிவிட்டதை தோனி செய்திருக்கிறார். அவர் தனது பிறந்தநாளை தனது செல்ல பிராணிகளுடன் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார். கேக்கை வெட்டி ஒவ்வொரு நாய்க்கும் ஒவ்வொரு துண்டாக வீச, எல்லா நாய்களும் கேக்கை கச்சிதமாக பிடித்து சாப்பிடுகின்றன.

தோனியும் அதே கேக்கின் சில துண்டுகளை வெட்டி சுவைத்தார். மேலும் அந்த வீடியோவில் தோனியின் கால்களில் அறுவை சிகிச்சை செய்து பூரண குணமடைந்து இருப்பதும் தெரிகிறது. இதன் மூலம் தோனி நிச்சயம் அடுத்த சீசனில் கலந்துகொள்வார் என ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply