MS Dhoni Cinema Life : தோனி சினிமாவில் நுழைவாரா? சாக்ஷி விளக்கம்...

MS Dhoni Cinema Life :

நல்ல கதையாக இருந்தால் தோனி சினிமாவில் நடிக்க கூடும் என்று அவரது மனைவி சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார்.

நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியின் இயக்கத்தில் அவர்களின் முதல் தமிழ் திரைப்படமான LGM (லெட்ஸ் கெட் மேரிட்) என்ற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, நடிகை நதியா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது LGM படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 25) சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சாக்ஷி , இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி, ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, ஆர்ஜே விஜய், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சாக்ஷி, தோனிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையேயான உறவுக்கு மொழி ஒரு தடையில்லை என்றும், இது ஒரு விதமான எமோஷன் என்று கூறினார். இதனால்தான் இங்கு தமிழில் படம் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சாக்ஷியிடம், சினிமாவிலும் தோனி கால் பதிப்பாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நல்ல கதை இருந்தால் அதில் நடிக்கலாம். அவர் ஏற்கனவே பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேமராவை கண்டு பயம் இல்லை. எப்படி நடிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். 2006-ல் இருந்து கேமரா முன் நடித்து வருகிறார். ஏதேனும் ஒரு நல்ல கதை அமைந்தால் அதில் நடிக்கலாம். தோனிக்கான கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் முதலில் ஆக்ஷன் கதைகளை தேர்ந்தெடுப்பேன். அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply