MS Dhoni's Daughter's School Fees: தோனியின் மகள் படிக்கும் பள்ளியின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?

மகேந்திர சிங் தோனி :

மகேந்திர சிங் தோனி கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தியாவின் கேப்டனாக பதவியேற்று இந்திய அணியை வழி நடத்தி வந்தார். இந்திய அணிக்காக பல்வேறு ஐசிசி கோப்பைகளை வென்று தந்துள்ளார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெறும் இளைஞர்களை வைத்து இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்று தந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் சச்சினின் கடைசி உலக கோப்பை என்பதால் அவருக்காக கோப்பை வென்று சமர்ப்பணம் செய்தார்.

பிறகு 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்று சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் பல்வேறு கோப்பைகளை வென்று தந்துள்ளார். அவருக்கு இந்த 2007ஆம் ஆண்டு முதல் சாக்ஷி உடன் காதல் இருந்து வந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.

அந்த நேரத்தில் தோனி ஆஸ்திரேலியா நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கூட இந்தியா தோல்வியடைந்த பிறகு தன் மகளை பார்க்கச் சென்று வந்தார். இதை எடுத்து சென்னை அணி விளையாடும் போட்டிகளில் தன் மகள் ஸிவாவை அழைத்துக் கொண்டு வருவார். இதனால் மகள் ஸிவாவிற்கும் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. இந்த ஒன்பது வயது சிறுமிக்கும் தற்போது Instagram-ல் Followers எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

MS Dhoni's Daughter's School Fees :

தற்போது ஸிவா அவர்கள் ராஞ்சியில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இப்போது அவர் படிக்கும் பள்ளியின் பள்ளி கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அந்தப் பள்ளியில் பள்ளி கட்டணம் ரூபாய் 2.75 லட்சம் வசூலிக்கப்படுகிறது. தோராயமாக அந்தப் பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு மாதம் மட்டும் 23 ஆயிரம் ரூபாய் பள்ளி கட்டணமாக வாங்கப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. டோனி மகள் பள்ளி கட்டணம் குறித்து தகவல்கள் பெரும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Slideshows

Leave a Reply