MS Dhoni's Latest Facebook Post : புதிய பொறுப்பு | புதிய சீசன் | தோனி சமூக வலைதளத்தில் போட்ட பதிவு

MS Dhoni's Latest Facebook Post :

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தோனி சமூக வலைதளங்களில் (MS Dhoni’s Latest Facebook Post) வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, ஐந்து முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார். தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஏற்கனவே கடந்த சீசனில் கோப்பையை வென்ற பிறகு ரசிகர்களிடம் விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சீசன் தொடங்கும் முன் தோனி காலில் அறுவை சிகிச்சை செய்து தற்போது குணமடைந்து வருகிறார். தோனிக்கு தற்போது 42 வயதாகிவிட்டதால், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி இந்தத் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாடி விட்டு பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தோனி சமூக வலைதளங்களில் (MS Dhoni’s Latest Facebook Post) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த புதிய சீசனுக்காகவும், புதிய பொறுப்புக்காகவும் என்னால் காத்திருக்க முடியாது என தோனி பதிவிட்டுள்ளார். தோனி ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. திடீரென MS தோனி இப்படி போடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தோனி முதல் போட்டியில் விளையாடி பின்னர் பயிற்சியாளராக வர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் இது ஒன்றுமில்லை. இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்டாக இருக்கலாம் என்கின்றனர் இன்னொரு தரப்பு ரசிகர்கள். ஏற்கனவே டி20 உலகக் கோப்பையின் போது தோனி இப்படி ஒரு விளம்பர உத்தியை கையாள்வதால், இது ஒரு உத்தியாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது விளம்பர யுக்தி என்றால் கண்டிப்பாக தோனி ரசிகர்கள் இப்படி விளையாட கூடாது என்றும் சிலர் கூறியுள்ளனர். 2008ல் சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டதில் இருந்தே தோனி கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில், 2022ல் ஒருசில போட்டிகளுக்கு மட்டும் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக ஆக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பிறகு கேப்டனாக தொடர்ந்து பணியாற்றுகிறார்.

Latest Slideshows

Leave a Reply