MTC Bus Mobile Apps : சென்னை அரசு பேருந்துகளில் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சென்னை மாநகர அரசு பேருந்துகளில் புதிய சேவையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் (MTC Bus Mobile Apps) செய்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் பயணத்தை சிறப்படைய செய்யும் வகையில் ஒரே மொபைல் செயலியில் இரண்டு முக்கிய சேவைகளை வழங்க போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பல புதிய போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்தாலும், பெரும்பாலும் சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஒரே சேவையாக பேருந்து சேவை மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. சென்னை போக்குவரத்து கழகத்தின் கீழ் மொத்தம் 3690 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் பெருநகர போக்குவரத்து கழகம் 800 வழித்தடங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. தினந்தோறும் அதிகப்படியான மக்கள் பேருந்து மூலமாகவே பயணம் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக சென்னை மக்களின் பேருந்து பயணத்தை மேம்படுத்தும் வகையில் புதிய மொபைல் ஆப்ஸ் சேவையை வழங்க திட்டமிடப்பட்டது.

பேருந்து நிலையங்களில் LED டிஸ்பிளே

சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் தங்களின் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க பேருந்து நிலையங்களில் LED டிஸ்பிளே திரைகள் நிறுவப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் குறிப்பிட்ட வழித்தடத்தில் வரும் அனைத்து பேருந்துகளின் விவரங்களும், பேருந்து வந்து சேரும் நேரம் மற்றும் லைவ் லொகேஷன் (MTC Bus Mobile Apps) போன்ற தகவல்கள் காண்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப்ஸ் சேவை அறிமுகம் (MTC Bus Mobile Apps)

சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மொபைல் செயலி மூலம் டிக்கெட் புக்கிங் (Ticket Booking) மற்றும் பேருந்து லொகேஷன் டிராக்கிங் (Bus Location Tracking) என இரண்டு சேவைகள் அறிமுகம் (MTC Bus Mobile Apps) செய்யப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் இந்த சென்னை பஸ் ஆப்ஸ் மூலம் பேருந்து எங்கு இருக்கிறது? எப்போது பயனர் இருக்கும் இடத்திற்கு பேருந்து வரும் என்ற தகவலை காண்பிக்கிறது. ஆனால் இதில் காண்பிக்கப்படும் லொகேஷன் மிக துல்லியமாக இல்லை என மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் மக்களின் புகார்களை சரி செய்ய தமிழக போக்குவரத்து கழகம் சென்னை பஸ் ஆப்ஸில் பஸ் டிராக்கிங் சிஸ்டத்தை மேலும் ஒரு படி மேம்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதில் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் LED டிஸ்பிளே நிறுவப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இந்த சோதனை வெற்றிபெற்றுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் விரைவில் பல்வேறு இடங்களில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. QR மூலம் டிக்கெட் எடுப்பது, பேருந்தின் லைவ் லொகேஷன் மற்றும் பேருந்துகளில் LED டிஸ்பிளே போன்ற சிறப்பம்சங்கள் சிங்கப்பூர் பேருந்துகளில் மட்டுமே பார்க்க முடியும். தற்போது இந்த சேவையை (MTC Bus Mobile Apps) விரைவில் சென்னை பேருந்துகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply