Mudaliar Kuppam In ECR For A Day Trip : ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு ECR-ல் அருமையான இடம்

Mudaliar Kuppam In ECR For A Day Trip :

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முதலியார்குப்பம் ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு (Mudaliar Kuppam In ECR For A Day Trip) ஏற்ற இடம் ஆகும். கோடை விடுமுறைக்கும் மற்றும் பரபரப்பான நகர வாழ்க்கையில் பம்பரம் போல சுற்றிக் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை, புதுச்சேரி மக்களுக்கு முதலியார்குப்பம் ஒரு அழகு நிரம்பிய தீவு ஆகும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் கூட்டமே இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் அமைதி மற்றும் அழகு நிரம்பிய ஒரு தீவு ஆகும். இது பலரும் அறியாத ஒரு தனித்தீவு ஆகும். OMR-ல், மாமல்லபுரத்திலிருந்து தெற்கே 36 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 92 கிமீ தொலைவிலும் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து 58 கிமீ தொலைவிலும் இந்த மழைத்துளி படகு இல்லம் என்றும் அழைக்கப்படும் முதலியார்குப்பம் படகு இல்லம் ஆனது அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு முதலியார் குப்பம் (Mudaliar Kuppam In ECR For A Day Trip) மிகவும் ஏற்ற இடம்.

இந்த முதலியார்குப்பம் நீர் விளையாட்டு வசதிகள் கொண்டது ஆகும். இங்குள்ள படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரிருக்கை படகு, வாழைப் பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், எந்திர படகு, அதிகவேக ஜெட்ஸ்கி போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன. மேலும் வரிசை படகுகள், மிதி படகுகள், வேக படகுகள் என பல படகுகள் உள்ளன. உப்பங்கழிப் படகுச் சவாரி தளமானது நீர் விளையாட்டுகளுக்கான தனித்துவமான தளத்தை வழங்குகிறது. தற்போது சுற்றுலா பயணியர் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக டிஸ்கோ போட் அறிமுகப்படுதப்பட்டு உள்ளது. முதலியார்குப்பத்தில் ஆண்டு முழுவதும் நூற்றுக்கணக்கான பெரிய ஃபிளமிங்கோக்களை காணலாம். ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த வாத்துகள், டெர்ன்கள் மற்றும் வேடர்கள் ஆகியவற்றை இங்கு குளிர்கால மாதங்களில் காணலாம்.

படகில் பயணிக்கும் போது சுற்றுலா பயணியர் புலம்பெயர் பறவைகளை கண்டுகளிக்கலாம். சுவையான கடல் உணவுகளை சுவைத்து மகிழ படகு குழாம் உணவகம் உள்ளது. முதலியார்குப்பம் பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. முதலியார்குப்பத்திலிருந்து (Mudaliar Kuppam In ECR For A Day Trip) சுமார் 4 கி.மீ தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது. இந்த கடற்கரை தீவுக்கு படகுகள் மூலம் சென்று வரலாம். வண்ணமயமான கடற்கரை ஓடியூர் ஏரி தீவிற்கு செல்ல எந்திர படகு வசதிகள் உள்ளது. இது சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. 

Latest Slideshows

Leave a Reply