Muharram 2025 : முஸ்லிம்களுக்கு மத முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் முஹர்ரம்

முஹர்ரம் ஆனது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் மத முக்கியத்துவத்தை (Muharram 2025) உணர்த்தும் நாளாகும்.

முஹர்ரம் வரலாறு

இது இஸ்லாமிய  நாட்காட்டியில் இஸ்லாமிய புத்தாண்டு தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது இஸ்லாமிய நாட்காட்டியில்  ரமலானை தொடர்ந்து இரண்டாவது புனித மாதமான முஹர்ரம் வருகிறது. இது இஸ்லாமிய சந்திர புத்தாண்டு தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் நபிகள் நாயகத்தின் பேரன் மற்றும் ஷியா சமூகத்தின் மூன்றாவது இமாம் என்று நம்பப்படும் இமாம் ஹுசைன் அலி இந்த நாளில் கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த நாள் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவு கூறும் துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது போர் தடைசெய்யப்பட்ட நான்கு புனித மாதங்களில் ஒன்று ஆகும்.

ஷியா முஸ்லிம்கள் முஹர்ரம் அனுசரிக்கும் முறை

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் பல்வேறு பழக்க வழக்கங்களுடன் முஹர்ரம் அனுசரிக்கப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் இந்த  முஹர்ரம் நாளில் கொண்டாட்டங்களைத் தவிர்த்து பெரிய துக்கக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இமாம் ஹுசைனின் தியாகத்தை கௌரவிப்பதற்காக ஷியா முஸ்லிம்கள் (Muharram 2025) துக்க ஊர்வலங்கள் மற்றும் சுய-தீங்கு செயல்கள் ஆகியவற்றை ஆஷூரா அன்று கடைப்பிடிக்கின்றனர். இந்த கால கட்டத்தில் திருமணங்கள், விருந்துகள் அல்லது பொழுதுபோக்குகளை ஷியா முஸ்லிம்கள் தவிர்க்கின்றனர். மேலும் இந்த மாதம் முழுவதும் கருப்பு நிற ஆடைகள் அணிந்து  துக்கம் அனுசரிக்கின்றனர்.

சுன்னி முஸ்லிம்கள் முஹர்ரம் அனுசரிக்கும் முறை

சுன்னி முஸ்லிம்கள் இந்த  முஹர்ரம் நாளில் நோன்பு மேற்கொண்டு தொண்டு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கின்றனர். ஏராளமான ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். இந்த நாள் முந்தைய ஆண்டின் பாவங்களை நீக்கும் நாள் என்று நம்பப்படுகிறது. மேலும்  இந்த முஹர்ரம் நாள் உடைய புனிதத்தன்மை ஆனது முஸ்லிம்கள் நோன்பு, பிரார்த்தனை, நற்செயல்கள், தொண்டு  புரிதல் மற்றும் சுய பிரதிபலிப்பு ஆகியவற்றை அதிகரிக்க ஊக்குவிக்கிறது

இந்தியாவில் முஹர்ரம் (Muharram 2025)

இந்தியாவில்  ஜூன் 26, 2025 ஆம் தேதி அன்று வானில் பிறை நிலவு  தெரிந்தது. அதன் பின்னர்  ஜூன் 27, 2025 ஆம் தேதி முதல் புனித மாதம் முஹர்ரம் தொடங்கி உள்ளது. சந்திரனை அடிப்படையாக கொண்டு முஹர்ரமுக்கான 10 வது நாளான ஆஷூரா கணக்கிடப்படுவதால் வரும் ஜூலை 6, 2025 அல்லது வரும் ஜூலை 7, 2025 அன்று அனுசரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில்  உள்ள  பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அரசு துறை அலுவலங்களுக்கு முஹர்ரம் அன்று  பொது விடுமுறை  வழங்கப்படும்.  மேலும் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள, வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருக்கும்.

Latest Slideshows