Muharram Festival 2024 : மொஹரம் பண்டிகையின் வரலாறும் முக்கியத்துவமும்

மொஹரம் இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித பண்டிகையாக (Muharram Festival 2024) கொண்டாடப்படுகிறது. ரமலானை போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரனை பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த நாள் மொஹரம்-உல்-ஹராம் என்றும் அழைக்கப்படுகிறது. 354 அல்லது 355 நாட்களை கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இறைவனின் தூதராகக் கருதப்படும் முஹம்மது நபி மொஹரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் புனித மாதம்’ என்று அழைத்தார்.

இந்தியாவில் மொஹரம் மாதம் ஜூலை 07 ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜூலை 17 ஆம் தேதி ஆஷுரா தினமாகும். மொஹரம் மாதத்தின் 10-வது நாளைத்தான் ‘ஆஷுரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. அஷுரா என்ற அரபு வார்த்தைக்கு ‘பத்தாவது நாள்’ என்று பொருள். எதிரி வீரர்களால் ஷுசைன் பாலைவனத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கொல்லப்பட்டார். இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன்படி முஸ்லிம்கள் இம்மாத பிறையின்படி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நோன்பு வைப்பார்கள்.

இஸ்லாமிய நாட்காட்டியின் மாதங்கள் :

  1. மொஹரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமாஅத்துல் அவ்வல்
  6. ஜமாஅத்துல் அகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

Muharram Festival 2024 - மொஹரம் வரலாறும் முக்கியத்துவமும் :

  • மொஹரம் வரலாறு 1443 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. முஹம்மது நபி மற்றும் அவரது தோழர்கள் கிமு 622 இல் மொஹரம் முதல் நாளில் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புராணத்தின்படி, அவர் மக்காவில் இஸ்லாமிய செய்தியை பரப்ப தடை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஹஜ்ரத் அலியின் மகனும், நபிகளாரின் பேரனுமான இமாம் ஹுசைன், இஸ்லாமிய தூராக மதத்தின் புனிதத்தைப் பரப்பத் தொடங்கினார். மேலும் அவர் மொஹரம் 10 வது நாளில் கொல்லப்பட்டார். அவரது மறைவைக் குறிக்கும் வகையில் ஆஷுரா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மொஹரம் மற்ற இஸ்லாமிய பண்டிகைகளிலிருந்து வேறுபட்டது. ஏனென்றால் அது துக்கமும் பிரார்த்தனையும் கொண்ட மாதம். இந்த நாளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது. ஷியா முஸ்லிம்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானது.
  • ஷியா முஸ்லீம்கள் ஹுசைனின் மரணத்திற்கு தங்களைத் தாங்களே சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, தத்பீர் அல்லது கமா ஜானி என்று அழைக்கப்பட்டு தங்களைத் தாங்களே துன்புறுத்தி கொள்வார்கள். சன்னி முஸ்லிம்கள் இந்த நாளில் நோன்பு வைத்து தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு “யா ஹுசைன்” அல்லது “யா அலி” என்று கோஷமிடுவார்கள்.

Latest Slideshows

Leave a Reply