Mumbai Ahmedabad High-Speed Rail Project: 7,000 கோடி ஆர்டரை L&T பெற்றுள்ளது...

Larsen & Toubro ஆனது EPC திட்டங்கள், ஹைடெக் உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL – National High-Speed Rail Corporation Limited) 508 கிமீ மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில்  திட்டத்திற்காக 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்ட கட்டுமான ஆர்டரை  L&T – க்கு வழங்கியுள்ளது.

MAHSR (Mumbai Ahmedabad High-Speed Rail Project) திட்டத்தில் L&T வென்றுள்ள இரண்டாவது பெரிய ஆர்டர் இதுவாகும்.

இது MAHSR புல்லட் ரயில் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் 155.76 கிமீ, தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 4.3 கிமீ மற்றும் குஜராத் மாநிலத்தில் 348.04 கிமீ- டன் 12 நிலையங்களை உள்ளடக்கிய ரயில் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டமானது சுமார் 82 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு கிடங்கை இயக்குவதை உள்ளடக்கியது. இதன் மூலம் மகாராஷ்டிராவின் ஷில்பாடா மற்றும் குஜராத்தின் அகமதாபாத்துக்கு இடையேயான 92% பிரதான பாதையை L&T செயல்படுத்தும்.

இந்த அதிவேக ரயில் ஆனது 320 கிமீ வேகத்தில் இயங்கும். அதன் முழு தூரத்தையும் சுமார் 2 மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட நிறுத்தங்களையும் கடக்கும்.

“அதிநவீன கட்டுமான முறைகள் மற்றும் விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி  L&T இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.,” என  S V Desai, Whole Time Director & Senior Executive Vice President (Civil Infrastructure)  கூறினார்.

மேலும் மதிப்புமிக்க மும்பை அகமதாபாத் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக 135.45 கிமீ நீளமுள்ள MAHSR – C3 பேக்கேஜை நிர்மாணிக்க தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இருந்து கட்டுமானப் பிரிவான L&T கன்ஸ்ட்ரக்ஷன் ஒரு ‘மெகா’ ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் ஒரு தனித் தாக்கல் செய்து உள்ளது. L&T ஒப்பந்தத்தின் சரியான நிதி மதிப்பை வெளியிடவில்லை.

MAHSR – C3 தொகுப்பின் நோக்கமானது, construction of viaducts, stations, major river bridges, depots, tunnels, earth structures, stations மற்றும்  other auxiliary works பணிகளை நிர்மாணிப்பதை உள்ளடக்கியது. ( i.e.வையாடக்ட்கள், நிலையங்கள், முக்கிய நதிப் பாலங்கள், டிப்போக்கள், சுரங்கங்கள், பூமி கட்டமைப்புகள், நிலையங்கள் மற்றும் பிற துணைப் பணிகளை நிர்மாணிப்பது ஆகும்.

மெகா ஆர்டர் வெற்றியை தொடர்ந்து Larsen & Toubro சென்செக்ஸ் பங்குகளில் முன்னணி பெற்றது

இந்த மெகா ஆர்டர் வெற்றியைத் தொடர்ந்து BSE இல் எல்&டி பங்குகள் சுமார் 4 சதவீதம் உயர்ந்து 52 வாரங்களில் அதிகபட்சமாக ₹ 2,594.40ஐ எட்டியது. இந்த பங்கு தொடர்ந்து 3.88 % ஆக உயர்ந்து ₹ 2,586.25 ஆக முடிந்தது மற்றும் சென்செக்ஸ் பங்குகளில் முன்னணியில் இருந்தது.

Larsen & Toubro பங்குகளின் விலை ரூ.2,564 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

Latest Slideshows

Leave a Reply