Mumbai Stars Investments In Real Estate Sector : ரியல் எஸ்டேட் துறையில் மும்பையின் முன்னணி திரை நட்சத்திரங்கள் செய்த முதலீடுகள்

திரைப்பிரபலங்கள் தங்களின் வருவாயை பல விதமான வர்த்தகங்களில் முதலீடு செய்வது வழக்கம். ரியல் எஸ்டேட் துறை ஆனது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட துறைகளில் ஒன்று ஆகும். ரியல் எஸ்டேட் துறை (Mumbai Stars Investments In Real Estate Sector) ஆனது இந்தியாவில் அசையா சொத்துகள் முதலீட்டில் முதலிடத்தில் உள்ளது. அதிக லாபம் வழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் திரைப்பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு ( Mumbai Stars Investments In Real Estate Sector)

பாலிவுட் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரின் சமீபத்திய ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு 200 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. SQUARE YARDS என்ற நிறுவனம் இவர்கள் செய்த பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையில் சமீபத்தில் மும்பையில் MULUND பகுதியில் இவர்கள் இருவரும் 10 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியிருக்கும் தகவலை கூறியிருக்கிறது.

24 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட இந்த குடியிருப்புகள் உள்ள இந்த MULUND ஏரியா அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள் திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் பச்சைபசேலென்ற என காட்சிகள் உள்ள Prime லோகேஷன் ஆகும். பத்திரப்பதிவு செய்ய மட்டும் ஒன்றை கோடி ரூபாயில்  ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தினார்கள் என SQUARE YARDS தெரிவித்துள்ளது. மேலும் ஜான்வி கபூர் 169 கோடி ரூபாயும், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனும் 156 கோடி ரூபாயும், அஜய் தேவ்கன் மற்றும் கஜோலும் 110 கோடி ரூபாயும், ஷாஹித் கப்பூர் 59 கோடி ரூபாயும், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் குடியிருப்பு சொத்துகளை (Mumbai Stars Investments In Real Estate Sector) வாங்குவதில் முன்னுரிமை அளிப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக வர்த்தக வளாகங்கள், வாடகை கிடைக்கும் வகையிலான ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் இவர்கள் அனைவரும் ஆர்வம் காட்டுவதாக SQUARE YARDS தெரிவித்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்துகின்றனர். 2024 முதல் பாதியில் 37% வெளிநாட்டு வரவுகள் அதிகரித்துள்ளன. குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்த ரியல் எஸ்டேட் துறை அதிக வெளிநாட்டு இந்திய (NRI) முதலீட்டைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply