Mumbai Won The Irani Trophy : 27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை மும்பை அணி வென்றது

இரானி கோப்பையை (Irani Trophy) 27 வருடங்களுக்கு பிறகு மும்பை அணி (Mumbai Won The Irani Trophy) வென்றுள்ளது. அக்டோபர் மாதம் 1-ம் தேதி தொடங்கிய இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரஹானே தலைமையில் மும்பை அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா (Rest Of India) அணியை எதிர்த்து முதலில் பேட்டிங் செய்தது. மொத்தம் 5 நாள் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் இரானி கோப்பையில் முதல் இரட்டை சதம் அடித்த மும்பை வீரர் என்ற புதிய சாதனையும் சர்பராஸ் கான் படைத்தார். மேலும் மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே 97 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் எடுக்க மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்களை குவித்தது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பதிலடி:

மும்பை அணியின் இந்த இமாலய இலக்கை எதிர்த்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 191 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு பதிலடி கொடுத்தார். மேலும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இஷான் கிஷன் 38 ரன்களும், சாய் சுதர்சன் 32 ரன்களும் எடுக்க கடைசியில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பிறகு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணிக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் பவுலர்கள் 171 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 8-வது விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் தனுஸ் கோட்டியான் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். 5-வது நாள் முடிவில் மும்பை அணி 316/8 என்ற நிலையில் இருந்ததால் போட்டி சமனில் முடிந்தது.

Mumbai Won The Irani Trophy :

இரண்டாவது இன்னிங்சில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு 451 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டியை சமனில் முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை வெற்றி பெற்றதாக (Mumbai Won The Irani Trophy) அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இரானி கோப்பையை (Irani Trophy) மும்பை வெல்வது இது 15-வது முறையாகும். மேலும் மும்பை அணி கடைசியாக 1997-1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் இரானி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது வெற்றி பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply