Munroe Island : தென்காசிக்கு அருகில் இப்படி ஒரு அழகிய தீவு...

சுற்றுலா என்பது சோர்ந்து போன ஆன்மாவிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மனதிற்கு நிம்மதியை தர வல்லதாகும். இதனால் தான் நாளுக்கு நாள் இயற்கை சுற்றுலா மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நீங்கள் தென்காசி, கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு அருகில் இருந்தால் கண்டிப்பாக இந்த இடத்திற்கு சென்று வரலாம். இந்த இடம் தான் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மன்றோ தீவு (Munroe Island). உங்கள் மனதிற்கு மன நிறைவைத் தரும் இயற்கை சுற்றுலா தலமாகும்.

மறைக்கப்பட்ட வெனிஸ் :

Munroe Island : இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆலப்புழா நகரம் தான் இந்த சிறிய தீவு ஆகும். இந்த தீவு கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் 8 தீவுகளின் தொகுப்பாகும். இந்த இயற்கை எழில் கொஞ்சும் நகரம் கேரளாவில் பொதுவாக காணப்படும் ஒன்றாகும். கேரளாவில் எப்போதுமே பசுமையான தென்னந்தோப்புகள் மற்றும் பனந்தோப்புகள் நிறைந்து கண்களுக்கு விருந்து படைக்க கூடிய வகையில் அமைந்திருக்கும். ஏகப்பட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கூட இங்கு வந்து விடுமுறை நாட்களில் தங்கி இந்த இடங்களை ரசித்து வருகின்றனர்.

Munroe Island - மன்றோ உருவாக்கிய தீவு :

1790 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கேரளாவில் உள்ள திருவராங்கூர் நகரை கைப்பற்றிய பிறகு அங்கு மன்றோ அவர்கள் நிர்வாக தலைவராக இந்த அழகிய தீவை கண்ட இவர் இதனை நிச்சயமாக விரிவு படுத்த வேண்டும் என்று பழங்கால கருவிகளைக் கொண்டு இதனை சிறப்பாக பராமரித்து வந்தார். இதனால் தான் இந்த தீவு மன்றோ தீவு (Munroe Island) என்று அழைக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பான வெளி உலக இந்த வாழ்வில் அனைவரும் மன அழுத்தத்தில் இருக்கும் போது இந்த மாதிரியான இயற்கை சுற்றுலா தளம் நம் மனதிற்கு இனிமையான உணர்வுகளை தருகின்றன. இங்க உள்ள மக்கள் அனைவரும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் என இயற்கையோடு வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், மீன்பிடிப்பு, மற்றும் கால்நடை வளர்ப்பு இவைகளே இவர்களின் முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுடன் அன்பாக பழகி வருகின்றனர்.

எந்த காலங்களில் செல்லலாம்?

இந்த தீவை நாம் ஆண்டு முழுவதும் பார்வையிட முடியும். இருந்தாலும் அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் செல்லும் போது மிகவும் குளிர்ச்சியாகவும் இயற்கை எழில்களும் மிகுந்து காணப்படும். மார்ச் மாதம் முதல் வெப்ப காலம் தொடங்குவதால் இங்கு தண்ணீர் தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடும்.

Latest Slideshows

Leave a Reply