Murungai Keerai Benefits in Tamil: முருங்கை கீரை, பூ, பிசின் மற்றும் முருங்கைக்காய் பயன்கள்
முருங்கையில் கிடைக்க கூடிய அதாவது முருங்கை கீரை, பூ, பிசின் மற்றும் முருங்கைக்காய் ஆகிய அனைத்துமே உடலுக்கு நல்லது செய்யக்கூடிய மருத்துவம் நிறைந்தவையாக பயன்படுகிறது. முருங்கை தாராளமாக கிடைப்பதால் அதன் மகத்துவத்தை நாம் அறிய விரும்பவில்லை.
கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு முருங்கை மரத்தையாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். காரணம் தெரியுமா? முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல மருத்துவ குணங்கள் கொண்டது என்பது கிராமங்களில் வாழும் மக்கள் அனைவரும் அறிந்ததே. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் நகரவாசிகள் முருங்கையின் நன்மைகள் பற்றி அறிந்திருந்தாலும், முருங்கை மரங்களை வளர்க்க இடம் இல்லை. உங்கள் வீட்டில் இடம் இருந்தால், இன்றே முருங்கை தண்டைப் புதைத்து அதற்கு உயிர் கொடுங்கள்.
கிராமங்களில் கூட, இப்போதெல்லாம், நாட்டு முருங்கைக்கு பதிலாக, ஆபீஸ் முருங்கை என்ற பெயர் கொண்ட ரகத்தையே அதிகமாக காணமுடிகிறது. உயர்ந்து நிற்கும் முருங்கை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது முருங்கை செடிகள் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஹைபிரிட் ரகங்கள் இப்போது வலம் வருகின்றன.
முருங்கை மரம் என்றதுமே, மரம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, அதன் கிளைகளில் ஊர்ந்து செல்லும் கம்பளிப்பூச்சிகள் நிச்சயம் உங்கள் நினைவுக்கு வரும். முருங்கை மரத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து வைத்துக்கொண்டுதான் கம்பளி பூச்சிகள் அங்கு வாழ்கின்றன போல. சரி, கம்பளிப் பூச்சிகளிடமே ரகசியமாக பிறகு தெரிந்துகொள்ளலாம்.
முருங்கை கீரை
முருங்கை கீரையில் வைட்டமின் A, C, B , புரதம், சல்பர், கால்சியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், குளோரின் ஆகியவை உள்ளது. முருங்கை இலையை பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் E மற்றும் வைட்டமின் C மன வளம் மற்றும் நினைவாற்றலைப் பாதுகாக்க உதவுகிறது. மார்சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு முருங்கை இலை சாறு குடித்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. முருங்கை இலைப் பொடி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
முருங்கை கீரைச்சாறு இரத்த சுத்தி செய்வதுடன், எலும்புகளை பலப்படுத்துகிறது. கருப்பையை பலப்படுத்துகிறது. தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. முருங்கை இலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, தோல் தொற்று மற்றும் பாக்டீரியா பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. சிறுநீர் பாதையில் உருவாகும் நோய் தொற்றுகளை குணப்படுத்தவும் உதவுகிறது. முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், கண் நோய், பித்தம், மயக்கம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரம் இருமுறையாவது முருங்கைகீரை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
முருங்கை கீரை பயன்கள் (Murungai Keerai Benefits in Tamil)
ஒரு சில தாவரங்களின் சில பகுதிகள் மட்டுமே மனிதர்களுக்கு உணவாக பயன்படுகிறது. வேறு சில தாவரங்களில் அதன் இலை, காய், பூ, பிசின் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகைகளில் ஒன்றாக முருங்கை மரம் உள்ளது. அந்த முருங்கை மரத்தின் இலைகளுக்கு முருங்கை கீரைகள் என்று பெயர். இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கை கீரைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மலச்சிக்கல் நீங்க
நாம் அன்றாடம் உண்ணும் உணவை மறுநாள் கழிவுகளாக வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு நீர்ச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், உடல் சூடு போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.
உடல் மற்றும் கை கால் வலி நீங்க
பலருக்கும் கடுமையான வேலைகளை செய்த பிறகு கை, கால் மற்றும் உடம்பு வலிகள் ஆகியவை ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலையைப் பறித்து, தண்டுகளை நீக்கி, மிளகுச் சாறுடன் முருங்கை இலையைச் சாப்பிட்டு வந்தால், கை, கால் வலிகள் அனைத்தும் குணமாகும்.
மலட்டுத்தன்மை
ஆணோ, பெண்ணோ தங்கள் உடலில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் இருந்தால், குழந்தை பிறப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. இப்போதெல்லாம், ஆரோக்கியமற்ற மற்றும் கலப்பட உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால், குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஆண், பெண் இருபாலரும் முருங்கை இலையை வேகவைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்க வழிவகை செய்யும்.
இரத்த சோகை
இரத்த சோகை குறைபாடானது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறையும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. இந்த குறைபாடு பெரியவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. முருங்கை கீரை இதற்கு சிறந்த மருந்தாக உள்ளது. முருங்கை கீரையை தினசரி நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை உள்ளவருக்கு இரத்தமானது சரியான முறையில் கிடைத்து நோய் ஏதும் ஏற்படாமல் இருக்கும். உடல் வலிமை பெறும்.
தலைமுடி
நமது தலையில் உள்ள முடி வெப்பத்திலிருந்து நம் உச்சந்தலையை பாதுகாக்கிறது. இவ்வாறு பாதுகாக்க கூடிய தலை முடியானது வலுவானதாகவும் அடர்த்தியாகவும் வளர்வதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் முருங்கையில் இருப்பதால் முருங்கை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தோல் நோய்கள்
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சத்துக்குறைபாடு காரணமாக தோல் வியாதிகள் உருவாகிறது. முருங்கை இலையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் தோல் வியாதிகளை இது குணப்படுத்துகிறது. முருங்கை கீரையை தொடர்ந்து உட்கொள்வது தோல் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நோய்களையும் விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இவ்வாறு பல்வேறு விதமான நோய்களை முருங்கை நீக்குவதால் தான், நம் தமிழர்கள் முருங்கையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து நாம் அனைவரும் முருங்கையை சாப்பிட்டு உடல் வலிமை பெறுவோம்.
முருங்கை பூ, பிசின் மற்றும் முருங்கைக்காய் பயன்கள்
முருங்கை பூ பயன்கள்
முருங்கைப் பூவை பசும்பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பதம் அதிகரித்து, கண் பிரச்சனைகள் நீங்கும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களால் கண்ணாடி இல்லாமல் செய்தி தாள்களை படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், எழுத்து வெள்ளையாக மாறும். கண்ணில் உள்ள வெண்படலமும் மாறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பித்தம் அதிகரிப்பதால் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் தணிந்து உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
அதிகமான வேலை, மன அழுத்தம் ஆகியவை காரணமாக பலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. முருங்கை பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. சர்க்கரை நோயாளிகள் முருங்கைப் பூவைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம். மேலும் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிக கோபம், தலைவலி, எரிச்சல், அடிவயிறு வலி என பல வகைகளில் அவதிக்கு ஆளவர்கள். இவர்கள் முருங்கைப் பூவைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் மேற்கூறிய உபாதைகள் குறையும்.
முருங்கைப் பிசின் பயன்கள்
முருங்கை மரங்களிலிருந்து கருஞ்செம்மை நிறத்தில் வடியும் பசை போன்ற ஒரு பொருளை நீங்கள் கவனித்து இருக்கலாம். இதற்கு ‘முருங்கை பிசின்’ என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இதுவரை கவனிக்கவில்லை என்றால், முருங்கை மரத்திற்கு இப்போதே புறப்படுங்கள்! மரத்தின் தண்டில் இருந்து வடியும் பிசின் இயற்கையின் அதிசயம்! பிசின்களை சுரக்கும் எண்ணற்ற மரங்கள் உள்ளன. முருங்கை பிசின் காதில் உண்டாகும் புண்களுக்கு ஒரு அற்புதமான மருந்து. தேங்காய் எண்ணெயில் முருங்கை பிசினைக் கரைத்து புண் மீது தடவினால், படிப்படியாக புண் குறைவதை உணரலாம். அடிபட்டதால் உடலில் ஏற்படும் சிறிய வீக்கங்களுக்கு, செயற்கை விக்கமுறுக்கி மருந்துகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முருங்கை இலை அல்லது பட்டையை தண்ணீரில் அரைத்து வீக்கத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விரைவில் வீக்கம் கரைந்துவிடும்.
முருங்கைக்காய் பயன்கள்
முருங்கையின் மருத்துவ குணங்களை தனித்தனியாகவே எழுதலாம். குறிப்பாக ஆண்களுக்கு, ஆண்மை தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் முருங்கைக்காய் இன்றளவும் உதவியாக உள்ளது. இந்த முருங்கைக்காய் மற்றும் அதன் விதைகள் ஆண்களுக்கு என்ன பயன்களை அளிக்கிறது என்பதை தற்போது காணலாம்.
முருங்கைக்காயை சிறியதாக கட் பண்ணி அவற்றில் இருக்கும் விதைகளை நிழலில் காயவைக்க வேண்டும். அப்போதுதான் அரைக்க எளிதாக இருக்கும். உலர்ந்த விதைகளை மிக்ஸியில் அரைக்கவும். அவற்றை சலித்து பாட்டிலில் கொட்டி வைக்கவும். இந்த பொடியை பசும்பாலில் கலந்து சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் முருங்கை விதையை நிழலில் காயவைத்து பொடியாக்காமல் எடுத்துக்கொள்ளவும், தேவைப்படும் போது விதையை நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் என்ன செய்கிறது என்பதை காணலாம்.
முருங்கையின் மருத்துவ குணங்கள்
புராஸ்டேட் சுரப்பி பாதுகாப்பு
புராஸ்டேட் என்னும் இந்த சுரப்பி ஆண்களில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவமான சுரப்பி. இது பாலியல் சுரப்பி ஆகும். இது குழந்தை பருவத்தில் வேலை செய்யாது, ஆனால் சிறுவர்கள் வயது வந்த பிறகு வேலை செய்கிறது. தோல் மீண்டும் சுருங்குவது போல் இவையும் வயதான பிறகு சுருங்கிவிடும். இந்நிலையில், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஆண்களுக்கு சுரக்க வேண்டிய டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும் பொது , இந்த புராஸ்டேட் சுரப்பி வீங்குகிறது. முருங்கை விதைகளை ஆண்கள் உட்கொள்ளும்போது புராஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் முருங்கை விதைகளில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ் கந்தக சேர்மங்களை கொண்டிருப்பதால் இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் சிறுநீர் கழிப்பதை மிகவும் கடினமாக்குகிறது. முருங்கை விதைகள் இந்த வகையான பிரச்சனைகளை பெரிய அளவில் தடுக்கிறது.
விறைப்பு தன்மையை சீராக்குகிறது
ஆண்கள் சாதாரணமாகவே இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு விறைப்பு தன்மையானது சீரான முறையில் இருக்க வேண்டும். ஆண் உறுப்பில் இரத்த ஓட்டம் சிக்கலாக இருக்கும் போது விறைப்புத்தன்மையில் பிரச்சனை ஏற்படுகிறது. இரத்தத்தில் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை காட்டுக்குள் அடங்காமல் இருக்கும் போது அவை சில நேரங்களில் விறைப்புத்தன்மை குறைபாட்டை உண்டாக்குகிறது. முருங்கை விதைகளில் தாவர நன்மைகளை வழங்கும் பாலிபினால்கள் எனப்படும் கலவைகள் உள்ளன. அவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிப்பதால் உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஆண் குறி விறைப்பு தன்மை குறையாமல் இருக்க இந்த இடத்துக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முருங்கை விதைகள் உதவுகிறது.
விந்தணுக்கள் அதிகரிக்க
ஆண் மலட்டுத்தன்மைக்கு மிகவும் பொதுவான காரணங்கள் குறைந்த விந்தணு எண்ணிக்கை, வீரியம் குறைவு, ஆயுள் இன்மை போன்றவை தான். அப்படி ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. முருங்கை விதைகள் ஆக்ஸிநேற்றிகளின் சிறந்த ஆதாரங்கள். இது விந்தணு உற்பத்தியை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்றங்களுக்கு எதிராக போராடுகிறது, இதனால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. வீரியமும் அதிகரிக்கிறது. இது விந்துவை கெட்டியாகவும் ஆக்குகிறது. இது குறித்த ஆய்வுகள் முயல்கள் மீது செய்யப்பட்ட ஆய்வில் முயல்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், தகுதியற்ற விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டறியப்பட்டது.
பெண்கள் கர்ப்பப்பையை பாதுகாப்பது போன்று ஆண்களும் புராஸ்டேட் சுரப்பி, இல்லற வாழ்க்கை சிறக்க சீரான விறைப்பு தன்மை, ஆரோக்கியமான விந்தணுக்கள் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும். இதற்கு முருங்கை விதையை பொடி செய்து அவற்றை பாலில் கலந்து தினமும் இரவு நேரத்தில் தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும். இவ்வாறு முருங்கையில் உள்ள அனைத்தும் நல்ல மருத்துவ குணங்களை கொடுக்கிறது. எனவே அனைவரும் முருங்கையை சாப்பிட்டு உடல் நலத்தோடு வாழ்வோம்.