Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று காளான். பல வடிவங்களில் காளான் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. காளான்களில் இருக்கும் சில கலவைகள் புற்றுநோயை குணப்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் தினமும் காளான் சாப்பிடுவதால் (Mushroom Benefits) ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Mushroom Benefits)

உடல் அழுத்தங்களுக்கு உதவும்

கார்டிசெப்ஸ் போன்ற ஒரு சில காளான்கள் அடாப்டோஜென்களாக செயல்படுகிறது. இந்த அடாப்டோஜென்கள் உடலில் ஏற்படும் அழுத்தங்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. புற்றுநோய் உள்ளவர்கள் இந்த வகை காளான்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஆரம்பநிலை புற்றுநோயை விரைவில் குணப்படுத்தலாம்.

ஊட்டச்சத்து நிறைந்தவை

காளான் குறைந்த கலோரியும், அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவின் ஆதாரமாகும். இதில் வைட்டமின் (B), வைட்டமின் (D) மற்றும் தாமிரம், செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்து உள்ளன. எனவே நரம்பு சம்மந்தமாக குறைபாடு உள்ளவர்கள் காளானை (Mushroom Benefits) அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

புற்றுநோயை குணப்படுத்தும்

சமீபத்தில் காளான்களை வைத்து புற்று நோயால் ஏற்படும் ‘ஆஞ்சியோஜெனீசிஸ்’ எனும் கட்டியை தடுக்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் ‘மைடேக்’ என்ற வகையான காளான் புற்றுநோயால் ஏற்படும் கட்டிகளின் பரவும் வேகத்தை தடுப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் புற்று நோய் வராமல் இருக்க காளானை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவும்.

இதய நோயை தடுக்கும்

காளான்களில் ‘குளுட்மேட் ரிபோநியூக்ளியோடைடு’ என்ற ஒரு வகையான நொதி உள்ளது. இந்த நொதியானது சமையலில் உப்பை தேவையற்றதாகவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நினைவாற்றலை மேம்படுத்தும்

காளானில் எர்கோதியோனைன் என்னும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை மூளை மற்றும் மூளைச் செல்களின் பாதுகாப்பு மற்றும் மனித உடலானது விரைவில் வயதாவதிலிருந்து பாதுகாக்கிறது. நாம் தினமும் உணவில் காளானை (Mushroom Benefits) சேர்த்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறன் போன்றவை மேம்படும்.

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

காளான்களை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் செரிமான சம்மந்தமான சிக்கல்களை தீர்க்கும்.

Latest Slideshows

Leave a Reply