Mushroom Growing On A Frog : தவளையின் உடலில் வளரும் காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Mushroom Growing On A Frog :

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியமான (Mushroom Growing On A Frog) கண்டுபிடித்துள்ளனர். ஒரு தவளையின் உடலில் ஒரு பக்கத்தில் காளான் வளர்ந்து உள்ளது. ஒரு உயிரினத்தில் இருந்து காளான் வளர்வது உலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். கடந்த ஜூன் 19, 2023 அன்று கர்நாடகாவின் கார்காலா மாலாவில் குத்ரேமுகா மலையடிவாரத்தில் சாலையோரத்தில் மழைநீர் தேங்கி இருந்த குளத்தில் “ராவ் இன கோல்டன் பேக்டு தவளைகளை” ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதில் தவளை ஒன்றின் உடலின் வலப்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் ஒன்று வளர்ந்து இருந்ததை அப்போது கண்டனர். பின்னர் அது உயிருள்ள ஒரு தவளையிலிருந்து வளரும் காளான் (Mushroom Growing On A Frog) என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

அந்த தவளை பிடிக்கப்படவில்லை அதற்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் அதை படம் எடுத்து ஆய்வு செய்தனர். இந்தப் படங்களைப் பார்த்த பூஞ்சை நிபுணர்கள் (Fungus Experts) வெள்ளை நிறத்தில் வளர்ந்து வருவது “போனட் காளான்” என அடையாளம் கண்டுள்ளனர். இவ்வகை காளான் பொதுவாக இறந்த அல்லது அழுகிய மரத்தில் வளரும் என்று கூறுகின்றனர். மற்ற உயிரினங்களுடன் கூட்டுவாழ்வு உறவில் வளரும் பூஞ்சைகள் பல உள்ளன. சில ஒட்டுண்ணிகள் உள்ளன. பொதுவாக “கருப்பு பூஞ்சை” என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒரு உயிரினத்தில் காளான் வளர்வது இதுவே முதல் முறை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘உயிருள்ள தவளையில் இருந்து காளான் முளைத்தது இல்லை. இந்த தவளை இதுவரை பிடிக்கப்படவில்லை. எனவே இதை எங்களால் கணிக்க முடியவில்லை’ என்று ஆய்வின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.  குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரப்பதமான சூழல் காரணமாக காளான் வளர சிறந்த சூழலை வழங்கியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அங்கு எவ்வாறு காளான் வளர ஆரம்பித்தது என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. ஆனால் தவளை பிடிபடாததால் காளான் எப்படி சரியாக வளர்ந்தது என்பது பற்றி தெரியவில்லை. இந்த போனட் காளானின் வளர்ச்சி தவளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் தீர்மானிக்க முடியாது என்றார்.

உலகெங்கும் உள்ள 700-க்கும் மேற்பட்ட வகையான Amphibians-களை அச்சுறுத்தும் ஒரு பூஞ்சை ஏற்கனவே இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி கவலை தெரிவிக்கின்றனர். Batrachochytrium Dendrobatids இது சைட்ரிடியோமைகோசிஸ் என்ற நோயை ஏற்படுத்துகிறது. இது சில இறப்புகளை ஏற்படுத்தும் மற்றவர்களுக்கு 100 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு தவளை இனங்களைப் பாதுகாக்கவும் அறியப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் இல்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply