Mycena Chlorophos : தமிழகத்தில் முதல் முறையாகக் ஒளிரும் காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  வனப்பகுதியில் ஒளிரும் தன்மையுள்ள காளான்கள் இருப்பது முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை” (Kanyakumari Nature Foundation) மற்றும் அந்த மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய ஆய்வு பயணத்தின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளையின் இயக்குநர் திரு.வினோத் சதாசிவன் மழைக்காலத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட களஆய்வு பயணத்தின் போது இந்த ஒளிரும் வகை காளான்களை (Mycena Chlorophos) கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Mycena Chlorophos - இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான் :

  • கோவா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநில காடுகளில் இந்த வகை காளான்கள் இருக்கின்றன. எனவே கேரளா காடுகளைப் போன்றே அதிக நிலப்பரப்பை கொண்டுள்ள கன்னியாகுமரி காடுகளிலும் இந்த வகை (Mycena Chlorophos) காளான்கள் இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வனத்துறையினரும் தேடிச்சென்றுள்ளனர்.
  • கன்னியாகுமரி வனப்பகுதியில் நீண்டகாலமாக வாழும் ‘காணி பழங்குடியினர்’ வெகு காலத்துக்கு முன்பு இரவு நேரங்களில் ஒளிரும் காளான்களை அதிக அளவில் பார்த்து உள்ளதாகவும் தற்போது அவ்வகை (Mycena Chlorophos) காளான்களை பார்ப்பது மிகவும் அரிதாகவிட்டது என கூறுகின்றனர்.
  • அதிகமாக மூங்கில் மரங்கள் உள்ள பகுதிகளிலேயே இந்த வகை காளான்கள் வளரும். எனவே வனத்தில் மூங்கில் காடுகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வனத்துறையினருடன் கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளையின் குழுவினர் நடத்திய மூன்று மாத தீவிர தேடுதலுக்கு பின்னர் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள குலசேகரம் வனசரக பகுதியில் ஒளிரும் தன்மையுள்ளன காளான்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒளிரும் காளான் ‘மைசீனியா குளோரோஃபோஸ்’ (Mycena Chlorophos) ரகத்தை சேர்ந்தது. மேலும் கன்னியாகுமரி வனப்பகுதியில் ஒளிரும் காளான்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பூச்சிகளை ஈர்க்கவே ஒளிர்கிறது :

இந்த ஒளிரும் காளான் (Mycena Chlorophos) தனது விதைகளை பரப்ப வேண்டும் என்பதற்காகவே ஒளிர்கிறது. இந்த ஒளியால் ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் மீது காளான் விதைகள் பட்டு மற்ற இடங்களுக்கு பரவுகின்றது. மின்மினி பூச்சியின் (Fireflies/Glow Worm) வாலில் இருப்பது போன்று இந்த வகை காளான்களில் Luciferin என்ற ஒரு வித வேதிப்பொருள் உள்ளது. இது கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை சேர்ந்த ஒரு கலவை போன்றது. காற்றில் உள்ள ஆக்ஸிஜன் இதில் பட்ட உடன் Luciferase என்கிற ஒரு நொதி செயல்பட்டு இந்த Luciferin ஒளிரும்.

Latest Slideshows

Leave a Reply