பிரதமர் மோடி Mysore To Chennai Vande Bharat Service-யை 12.03.2024 இன்று துவக்கி வைக்கிறார்

Mysore To Chennai Vande Bharat Service - பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே, மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று காணொலி மூலம் துவக்கி வைக்கிறார் :

இப்போது இந்திய நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே மொத்தம் 47 வந்தே பாரத் ரயில்கள் ஆனது இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்கள் ஆனது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சிறந்த முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் மைசூர் ஆகிய நகரங்களுக்கும் குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் சேவைகள் ஆனது சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வந்தே பாரத் ரயில்கள் விரைவாக செல்வதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படுவதால், இந்த ரயில்களுக்கெல்லாம் பயணிகளிடம் நல்ல வரவேற்பு ஆனது கிடைத்து வருகிறது. இதனால் வந்தே பாரத் ரயில்கள் ரிசர்வேஷன் ஆனது எப்போதுமே நிரம்பியே உள்ளது.

கூட்டத்தை சமாளிக்க முடியாத சில சமயங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட்டத்தை சமாளிக்கும் விதமாக சென்னை சென்ட்ரல் – கர்நாடக மாநிலம் மைசூர் இடையேயான கூடுதலாக, ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை (Mysore To Chennai Vande Bharat Service) இன்று 12.03.2024-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக இந்த வந்தே பாரத் ரயில் சேவையை இன்று 12.03.2024-ம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே 6 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும். தினசரி காலை 6 மணிக்கு மைசூரில் புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது,

  • மண்டியா – 6.28 AM
  • பெங்களூர் – 7.45 AM
  • கிருஷ்ணராஜபுரம் – 8.04 AM
  • காட்பாடி – 10.33 AM

வழியாக நண்பகல் 12.20 PM மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். அதேபோல, மறுமார்க்கத்தில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு,

  • காட்பாடி – 6.23 PM
  • கிருஷ்ணராஜபுரம் – 8.48 PM
  • பெங்களூர் – 9.25 PM
  • மண்டியா – 10.38 PM

Mysore To Chennai Vande Bharat Service : வழியாக சென்று இரவு 11.20 மணிக்கு இந்த வந்தே பாரத் ரயில் மைசூர் ரயில் நிலையத்தை சென்றடையும். இப்போது இயக்கப்படும் வெள்ளை + நீலம் கலந்த வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ரயில் ஆனது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த புதிய வந்தே பாரத் ரயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகிறது. சென்னை – பெங்களூர் இடையே மட்டும்  ஏப்ரல் 4-ம் தேதி வரை இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது இயக்கப்பட்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் மைசூர் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை (Mysore To Chennai Vande Bharat Service) ஆனது வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் இயக்கப்படாது.

Latest Slideshows

Leave a Reply