'Na Na' Trailer Release : 'நா நா' படத்தின் ட்ரைலர் வெளியீடு

   நடிகர் சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் ‘நா நா’ ஆகும். இந்த படத்தை சலீம் படத்தை இயக்கிய இயக்குனர் நிர்மல் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் இசைமைத்துள்ளார். 2019-இல் அறிவிக்கப்பட்ட இந்த படம் சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்படம் முழுவதும் முடிவடைந்து ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

   நடிகர் சசிகுமார் நடித்து திரைக்கு வந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அயோத்தி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில் கிடப்பில் இருந்த ‘நா நா’ படத்தின் ரிலீஸ் வேளைகள் தொடங்கின. சமீபத்தில் இதன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது. இந்நிலையில்  ‘நா நா’ படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

'Na Na' Trailer Release Date:

   இந்நிலையில் தற்போது ‘நா நா’ ( ‘Na Na’ trailer release) படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலரின் தொடக்கக் காட்சியில், ‘இங்கு நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை, உங்களைப் போல நானும் நேர்மையாக இருந்தும், உண்மையைப் பேசி, கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று நினைச்சேன். அதெல்லாம் பணக்காரன் சுத்தி இருக்குறவங்கள ஏழையா வச்சுக்குறதுக்கு கண்டுபுடிச்ச  வார்த்தை அவ்வளவுதான்.

  இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. ‘ஒன்று வேட்டையாடுவது, இன்னொன்று இரையாகிறது’ என்ற சசிகுமாரின் வசனத்துடன் கூடிய காட்சிகள் மிரட்டும் வகையில் உள்ளது. தற்போது ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் நிச்சயம் சசிகுமார் மற்றும் சரத்குமாருக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply