NABARD Bank-ன் 43 வது நிறுவன தின விழா சென்னையில் நேற்று நடைபெற்றது

NABARD (National Bank For Agriculture And Rural Development – தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) ஆனது கிராமப்புற முன்னேற்றம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துதல், விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆகும். இந்த NABARD Bank ஆனது 1982 இல் Rs.100 கோடி ஆரம்ப மூலதனத்துடன் நிறுவப்பட்டது. 1981 ஆம் ஆண்டின் 61வது சட்டத்தின் மூலம் இந்த NABARD Bank ஆனது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த தனித்துவமான NABARD வளர்ச்சி நிதி நிறுவனம் ஆனது கிராமப்புற வளர்ச்சியுடன் தொடர்புடைய கடன் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக நிறுவப்பட்டது. இப்போது இந்த NABARD Bank ஆனது நாட்டின் மொத்த கிராமப்புற உள்கட்டமைப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு நிதி உதவி அளிக்கிறது.

NABARD Bank-ன் 43 வது நிறுவன தின விழா ஆனது சென்னையில் நேற்று (18.07.2024) நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் நடப்பாண்டுக்கான NABARD வங்கியின் செயல்திட்டங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் உரை :

  • வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழக அரசு ஆனது 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது.
  • தமிழகத்தில் ரூ.195 கோடியில் 4,454 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படுகின்றன.
  • இந்த 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசுக்கு NABARD Bank உதவ வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NABARD Bank-ன் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொது மேலாளர் R.Anand உரை :

NABARD Bank-ன் தமிழ்நாடு மண்டல முதன்மைப் பொது மேலாளர் R.Anand, “NABARD Bank ஆனது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1.67 லட்சம் கோடி கடனுதவி வழங்கியுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் வர்த்தக மேம்பாட்டுக்காக NABARD Bank ஆனது ரூ.265 கோடி கடனுதவி அளித்துள்ளது. தமிழக அரசுக்கு NABARD Bank ஆனது ஊரக கட்டுமான மேம்பாடு மற்றும் நீண்டகாலம் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்காக ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்கி உள்ளது. இந்த ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவியில்,

  • ரூ.900 கோடி ஆனது பாசனத் திட்டங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று, ஆண்டுக்கு 6.25 லட்சம் டன் உணவு தானியங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
  • ரூ.12,300 கோடி நிதி ஆனது கிராம சாலைகள், பாலங்கள் அமைக்க வழங்கப்பட்டு, 73 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ரூ.5,300 கோடி நிதி ஆனது ஊரக கிடங்குகள், குடிநீர் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆனது 78 லட்சம் பேருக்கு தூய்மையான குடிநீரை வழங்குகிறது.

இந்த 2024-25 நடப்பாண்டில் தமிழக அரசுக்கு NABARD Bank ஆனது ரூ.8.3 லட்சம் கோடி வழங்க உள்ளது” இவ்வாறு  கூறினார்.

Latest Slideshows

Leave a Reply