NABARD Recruitment 2024: நபார்டு வங்கியில் ரூ.35000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி National Bank for Agriculture and Rural Development (NABARD) ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கடந்த 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முழுவதும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி பணிக்காக உருவாக்கப்பட்ட இந்த நபார்டு வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது.  

தற்போது இந்த நபார்டு வங்கியில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர்(Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு யார் யார்? விண்ணப்பிக்கலாம், வயது தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். 

NABARD Recruitment 2024: காலியிடங்களின் எண்ணிக்கை

நபார்டு வங்கியில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

NABARD Recruitment 2024: கல்வி தகுதி

நபார்டு வங்கியில் இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD Recruitment 2024: வயது தகுதி

நபார்டு வங்கியில் இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NABARD Recruitment 2024: சம்பளம் (Salary Process)

இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.35000/- சம்பளம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

நபார்டு வங்கியில் இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

விண்ணப்பிக்கும் முறை (Application Process)

நபார்டு வங்கியில் இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.nabard.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி (Application Last Date)

நபார்டு வங்கியில் இந்த அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.10.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply