Parle Agro சிறு தொழில் நிறுவனத்தை ரூ.8000 கோடியாக்கிய Nadia Chauhan

Nadia Chauhan சிறு தொழிலை நிறுவனத்தை ரூ.8000 கோடியாக்கியுள்ளார் :

37 வயதான Nadia Chauhan தனது தந்தை பிரகாஷ் சௌகானின் கம்பெனியான பார்லே அக்ரோவில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக இருக்கிறார். அத்துடன் Nadia Chauhan இணை மார்க்கெட்டிங் இயக்குநராகவும் உள்ளார். பார்லே அக்ரோவில் நதியாவின் மூத்த சகோதரி சஹானா சௌகான் கம்பெனியின் CEO-ஆக உள்ளார். Nadia Chauhan 1985-ல் பிறந்தார். நதியா பிறந்த அதே 1985ஆம் ஆண்டில் பார்லே அக்ரோ நிறுவனம் ஆனது தொடங்கப்பட்டது. ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் தயாரிப்பான டெட்ராபேக்கில் மாம்பழ பானத்தை தந்தை பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். நதியா 17 வயதில் H.R.College Of Commerce & Economics-ஸில் பட்டம் பெற்ற பிறகு தனது தந்தை பிரகாஷ் சௌகானின் கம்பெனியான பார்லே அக்ரோ நிறுவனத்தில் 2003-ஆம் ஆண்டு சேர்ந்தார்.

நதியா தனது தந்தை பார்லே அக்ரோ நிறுவனத்தின் 95% வருமானம் ஆனது ஃப்ரூட்டி (Frooti) என்ற ஒரே பொருளில் இருந்து வந்ததைக் கவனித்தார். அப்போது பார்லே அக்ரோ நிறுவனத்தின் வருவாய் வெறும் ரூ.300 கோடி ஆக இருந்தது. அதன்பிறகு நதியா வருமானம் தரும் மற்ற பொருட்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் நதியா ஆப்பி ஃபிஸ்ஸை (Appy Pizz) அறிமுகப்படுத்தினார். Appy Pizz ஆனது மார்க்கெட்டில் நல்ல பிரபலம் ஆனது. நதியா இந்தியாவின் முதல் பேக்கேஜ் செய்யப்பட்ட நிம்பூ பானி உள்ளிட்ட பிற தயாரிப்புகளை பின்பு அறிமுகப்படுத்தினார். நதியாவும் அவருடைய சகோதரி சஹானா சௌகானும் பல புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவினர். நதியா நிறுவனத்துக்கு அதிசயங்களைச் செய்த ஃப்ரூட்டியை 2015 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கினார். பிசினஸ் டுடே கணக்கின் படி ஃப்ரூட்டியின் பங்களிப்பு 48%-மாக வணிகத்தில் இருந்தது.

நல்ல வளர்ச்சியைப் பெற்று 2017 ஆம் ஆண்டில் பார்லே அக்ரோ நிறுவனம் ரூ.4200 கோடி சம்பாதித்தது. 2022-2023 இல் பார்லே அக்ரோ நிறுவன வருமானம் ரூ.8000 கோடியாக உயர்ந்தது. நதியா சௌகானின் பிரமாதமான உழைப்புதான் இதற்கு மூலகாரணம் ஆகும். பார்லே அக்ரோ நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பெய்லி ஆனது ரூ.1000 கோடி வணிகமாக மாறியது. பார்லே அக்ரோ நிறுவனத்தை 2030-க்குள் ரூ.20,000 கோடி பிராண்டாக மாற்ற நதியா இலக்கு வைத்துள்ளார். நதியா தனது தொழில் வெற்றியின் மூலம் குடும்பத் தொழிலைப் பின்னணியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் கடின உழைப்புக்கும், அயராத அர்ப்பணிப்புக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்ற பலரின் கருத்து தவறானது என்று நிரூபித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply