பிரதமர் மோடி Namo Drone Didi Yojana மூலம் இலவசமாக ட்ரோன்கள் மற்றும் இலவச பயிற்சி

மத்திய அரசின் புதிய திட்டம் (Namo Drone Didi Yojana) - Free Drones & Free Training For Women :

இந்தியாவில் 11 இடங்களில் உள்ள பெண்களுக்கு பிரதமர் மோடி Namo Drone Didi Yojana மூலம் இலவசமாக 1000 ட்ரோன்கள் வரும் மார்ச் 11ஆம் தேதி வழங்க இருக்கிறார். பிரதமர் மோடி Namo Drone Didi Yojana திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக 1000 ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இந்த இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், மத்திய அரசுடன் இணைந்து “Namo Drone Didi Yojana” திட்டத்தின் மூலமாக 446 ட்ரோன்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும், கருடா ஏரோ நிறுவனம் இந்தியாவில் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே சுமார் 500 நபர்களுக்கு  இலவசமாக ட்ரோன் பயிற்சி அளித்துள்ளது.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் CEO ஷ்யாம்குமார் உரை :

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் CEO ஷ்யாம்குமார் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அக்னி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். தற்போது சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் (Namo Drone Didi Yojana) இலவசமாக ட்ரோன் பயிற்சி அளித்து வருகிறது என தெரிவித்தார். இந்த பயிற்சி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்தார். பெண்களும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இந்த வாய்ப்பின் மூலம் உயர்வார்கள் என்றார். முதற்கட்டமாக பெண்களுக்கு அக்ரி ட்ரோன் மூலமாக ஸ்பிரே எவ்வாறு தெளிக்கப்படுகிறது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இந்த பயிற்சிக்கு பெண்கள் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  பாஸ்போர்ட் அல்லது பேன்கார்டு அல்லது அரசு அங்கீகார அடையாள அட்டை ஏதேனும் ஒன்று இந்த பயிற்சிக்கு பெண்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் கிடையாது மற்றும் முற்றிலும் இலவசம் என குறிப்பிட்டார். ட்ரோன் மூலமாக விவசாய துறையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக தெரிவித்தார். மேலும், விவசாயத்தில் அறிவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் விவசாயிகளின் தேவைகளை மிக எளிதாக பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்தார். கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலமாக, தற்போது மேரி, லட்சுமி தேவி, ஜோதி மற்றும் சுனிதா ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply