Nani 30 Release Date: 'நானி 30' படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு

அப்பா மகள் உறவை பேசும் வகையில் நானி நடிக்கும் 30வது படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கிய தெலுங்குத் திரைப்படமான “தசரா” பான் இந்தியா படமாக வெளியானது.

நிலக்கரிச் சுரங்கப் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நானி தரமான லோக்கல் ஆக நடித்திருந்தார். வித்தியாசமான தோற்றத்தில் நடித்த இந்தப் படத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றார். இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை கடந்துள்ளது. நானி நடிப்பில் ஒரு படம் ரூ.100 கோடியை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நானி தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். வைர எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷுர்யுவ் இயக்குகிறார். ‘சீதாஹாரம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ‘மிருணால் தாகூர்’ இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நானியுடன் ஒரு பெண் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அப்பா-மகள் பாசத்தின் படமாக இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நானி மற்றும் மிருணால் தாகூர் நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply