NASA Discovered A New Planet : பூமியை விட இருமடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி

NASA Discovered A New Planet :

பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் புதிய கிரகத்தை நாசா (NASA Discovered A New Planet) கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது. இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று நாசா ஆய்வு செய்து வருகிறது. கற்பனைக்கும் எட்டாத இந்த பெரிய பால்வெளி மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கும் என்ற கருத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். பூமியைப் போலவே வேறு கிரகங்களிலும் கண்டிப்பாக உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பதால் மற்ற கிரகங்களை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பூமியைப் போன்ற ஒரு கிரகத்திற்கான தேடல் என்பது சூரியக் குடும்பம் மற்றும் பால்வீதி கேலக்ஸிகளையும் தாண்டிவிட்டது.

சூரிய மண்டலத்தில் உள்ள வேறு கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று இருக்கிறதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உண்டா என்ற ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், தான் பூமியை போலவே புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் (NASA Discovered A New Planet) தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

பூமியில் இருந்து சுமார் 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் Hubble Space தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் இந்த ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். பாறைகள் நிறைந்த இந்த ஜிஜே9827டி கிரகத்தின் வளிமண்டலங்களில் நீர் மூலக்கூறுகள் நிறைந்து இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய சான்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஜிஜே9827டி கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்த கிரகத்தில் 425 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பதால் வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கண்டறியப்பட்ட நீர் மூலக்கூறு இருக்கும் கிரகங்களை ஒப்பிடும் போது இது பூமிக்கு மிக அருகில் இருப்பதாக நாசா  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply