Nasa Started Mapping : நிலவில் நீர் இருக்கும் இடத்தை மேப் செய்யும் பணியை நாசா தொடங்கியுள்ளது

சந்திரயான்-1

நிலவில் நீர் இருப்பதை முதன்முதலில் நம் இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் உறுதி செய்தது. மேலும் கடந்த ஆண்டு நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் நீர் இருக்கும் புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. இதனை தொடர்ந்து நிலவில் எங்கெல்லாம் நீர் (Nasa Started Mapping) இருக்கிறது என்பது குறித்த ஆய்வை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தொடங்கியுள்ளது.

லூனார் டிரெயில்பிளேசர் விண்கலம் (Nasa Started Mapping)

நாம் வாழும் பூமியில் மட்டுமே நீர் இருக்கும் என நம்பப்பட்டு வந்த நிலையில் 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது. அதுவரைக்கும் நிலவானது மண்ணும், கற்களும், பாறைகளும் நிரம்பியுள்ள பகுதி என நம்பியிருந்த உலக நாடுகள் சந்திரயான்-1 ஆய்வுக்கு பிறகு நிலவை புதிய (Nasa Started Mapping) கோணத்தில் ஆய்வு செய்வதற்கு பல்வேறு நாடுகள் செயற்கை கோள்களை அனுப்பி வைத்தன. அந்த செயற்கைகோளில் ஒன்றுதான் நாசாவின் லூனார் டிரெயில்பிளேசர். சுமார் 200 கி.கி எடை கொண்ட இந்த செயற்கைகோள் நிலவை 100 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.         

இந்த லூனார் செயற்கைகோளில் இரண்டு சோலார் பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 1.2 மீ  நீளத்தில் உள்ளது. இந்த சோலார் பேனல்கள் நிலவில் நீர் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும். நிலவில் நீர் இருப்பது சந்திரயான்-1 விண்கலம் மூலம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் எங்கு இருக்கிறது என்பதுதான் தெரியாது. இதை இந்த லூனார் செயற்கைகோள் (Nasa Started Mapping) கண்டுபிடித்து சொல்லும்.

ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன்

நிலவில் இருந்து நீர் எடுக்கப்பட்டால் இது மனித குலத்தின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இதற்கு காரணம் மற்ற கிரகங்களுக்கு பூமியில் இருந்து விண்கலனை அனுப்புவதை விட நிலவுக்கு விண்கலனை அனுப்புவதுதான் எளிமையாக இருக்கும். ஏனெனில் பூமியின் விடுபடு வேகம் 11 கி .மீ ஆகும். மேலும் பூமியை விட  மணிக்கு 2.38 கி.மீ வேகத்தில் குறைவான உந்து விசையில் நிலவுக்கு ராக்கெட் ஏவலாம். ஆனால் நிலவுக்கு எரிபொருள் எடுத்து செல்வது என்பது கடினமானது. இதற்குத்தான் விஞ்ஞானிகள் நீரை தேடுகின்றனர். இதற்கு காரணம் நீரில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் என இரண்டு முக்கிய மூலக்கூறுகள் உள்ளது. இதை மின்னூட்டம் அடையச்செய்து தனித்தனியாக பிரிக்க முடியும். மேலும் ராக்கெட்டில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இரண்டையும் திரவ எரிபொருளாக பயன்படுத்த முடியும். இதனால்தான் நிலவில் நீரை விஞ்ஞானிகள் தேடுகின்றனர். இதற்கு நாசாவின் “லூனார் செயற்கைகோள் விண்கலம்” (Nasa Started Mapping) நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply