Natarajan Excellent Spell : பரோடா அணியை சுருட்டிய தமிழ்நாடு

மும்பை :

விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி பரோடா (Natarajan Excellent Spell) அணியை 124 ரன்களுக்கு சுருட்டினார். விஜய் ஹசாரே டிராபி பிசிசிஐ நடத்தும் முதன்மையான ஐம்பது ஓவர் போட்டியாக கருதப்படுகிறது. குரூப் ஈ பிரிவில் தமிழ்நாடு அணியும், பரோடா அணியும் மும்பையில் பல சோதனைகளை நடத்தின. டாஸ் வென்ற பரோடா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் பரோடா வீரர்கள் சிறப்பாக பந்துவீசி தமிழக அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லுக்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழக அணியில் சாய் சுதர்சன் 15 ரன்களும், சாய் கிஷோர் 8 ரன்களும், நாராயண் ஜெகதீசன், பாபா அப்ரஜித் ஆகியோர் டக் அவுட்டாகவும், பாபா இந்திரஜித் 5 ரன்களும், விஜய் சங்கர் 11 ரன்களும் எடுத்தனர். 52 ரன்கள் சேர்ப்பதற்குள் தமிழகம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் நடுவரிசையில் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக ஷாருக்கான் 31 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தமிழக அணி 33.3 ஓவரில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Natarajan Excellent Spell :

Natarajan Excellent Spell : இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களம் இறங்கியது. இந்த நேரத்தில்தான் பந்து தமிழக வீரர் நடராஜன் கைக்கு சென்றது. நடராஜன் தனது ஆக்ரோஷமான பந்து வீச்சால் பரோடா வீரர்களை (Natarajan Excellent Spell) கலக்கத்தில் ஆழ்த்தினார். அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விஷ்ணு சோலங்கி மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அதேபோல் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். சிறப்பாக பந்து வீசிய நடராஜன் 7 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் 6 மாதங்களில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply