National Awards 2024 : 70வது தேசிய திரைப்பட விருதுகள்

2022 ஆம் ஆண்டிற்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் (National Awards 2024) மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். 

National Awards 2024 - தேசிய திரைப்பட விருதுகள் :

70வது தேசிய விருதுகளானது கடந்த மாதம் 16 ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற விருது வழங்கப்பட்டது. அதேமாதிரி தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் கன்னட படங்களும் (National Awards 2024) விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் விருதுகளை வென்ற திரைப்பட கலைஞர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

விருது வென்ற திரைப்பட கலைஞர்கள் :

முன்னதாக குறிப்பிட்டதைப் போல் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு மொத்தமாக 4 விருதுகள் வழங்கப்பட்டது. 

பொன்னியின் செல்வன் 1 :

  • சிறந்த திரைப்படத்திற்கான விருதினை படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஸ்கரன் மற்றும் இயக்குநரும் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளருமான மணிரத்னம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
  • சிறந்த இசையமைப்பாளர் – சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த இசை வடிவமைப்பு – பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இசை வடிவமைத்த ஆனந்த் கிருஷ்ண மூர்த்திக்கு சிறந்த இசை வடிவமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. 
  • ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

திருச்சிற்றம்பலம் :

  • அதேமாதிரி திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் நடன இயக்குநர் சதிஷ்குமாருக்கு, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக விருது வழங்கப்பட்டது. 

காந்தாரா :

  • கன்னட சினிமாவில், கிருஷ்ணரின் வராக ரூபத்தை கடவுளாக வணங்கும் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவான காந்தாரா படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தயாரிப்பாளர் விஜய் கிரிகந்தூர் பெற்றுக்கொண்டார். மேலும் இந்த படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நாயகனுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

கே.ஜி.எஃப் 2 :

  • கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்ததற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களான அறிவு மணி மற்றும் அன்பு மணி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. இவர்களை அன்பறிவ் என்று அழைக்கின்றனர். இவ்வாறு தேசிய விருது (National Award 2024) வென்ற அனைவரையும் ரசிகர்கள், திரைத்துறையினர் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply