National Collegiate Athletic Association 2025 : அமெரிக்காவில் NCAA-ன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி

NCAA (National Collegiate Athletic Association) என்பது அமெரிக்காவில் தடகளப் போட்டிகளில் ஆர்வமிருக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் அமைப்பாகும்.  இந்த NCAA-ன் முதன்மையான நோக்கம் ஆனது நாடு முழுவதும் உள்ள  தடகளப் போட்டிகளில் ஆர்வமிருக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதும் மற்றும் அவர்களது திறமையை தேசிய அளவில் கவனம் பெறச்செய்வதும் ஆகும். இது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளை ஊக்குவிக்கிறது. இது ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும்.

இந்த NCAA-ன் இறுதிப்போட்டிகளில் அமெரிக்காவில் உள்ள 1100 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று  போட்டியிடுவார்கள்.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிருஷ்ணா ஜெயசங்கர்: National Collegiate Athletic Association

National Collegiate Athletic Association

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிருஷ்ணா ஜெயசங்கர் கூடைப்பந்து வீரர்களின் மகள் ஆவார். கிருஷ்ணா ஜெயசங்கர் லாஸ் வேகாஸிலுள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவி ஆவார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவர்  கூடைப்பந்து வீரர்களின் மகள் ஆவார். கிருஷ்ணா ஜெயசங்கரின் பெற்றோர் ஜெயசங்கர் மேனன்  மற்றும்  பிரசன்னா ஆகிய இருவரும் இந்திய தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு கேப்டன்களாக விளையாடியவர்கள்.  சிறுவயதிலிருந்தே கிருஷ்ணா டென்னிஸ், பேட்மிட்டன், நீச்சல், கூடைப்பந்து என பல விளையாட்டுக்களை ஆர்வமாக விளையாடி வந்துள்ளார். கிருஷ்ணா 5-ம் வகுப்பு படிக்குபோது இவரது உடற்கல்வி ஆசிரியர்தான் இவரை குண்டு எறிதலில் நன்றாக கவனம் செலுத்தச் சொல்லி உள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா வரை கிருஷ்ணா ஜெயசங்கர் மேற்கொண்ட பயணம்.

Track and fieldல் கோப்பைகளை வென்ற கிருஷ்ணாவும் தன்னை மேலும் சிறந்த தடகள வீரராக  மெருகூட்டிக்கொள்ள குண்டூரில் உள்ள டென்விக் அகாடமியில் சேர்ந்தார்.

இந்த டென்விக்  அகாடமி ஆனது கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே நடத்தும் விளையாட்டு அகாடமி ஆகும். இந்த டென்விக்  அகாடமியின்  பயிற்சியாளர் மைக்கேல் வாசல் (Michael Vassell) NCAA குறித்து கிருஷ்ணாவிடம்  சொல்லி அது தொடர்பான ஆசையைத் தூண்டி உள்ளார்.  அதனால் கிருஷ்ணா  தனது கவனத்தை  குண்டு எறிதலில் இருந்து வட்டு எறிதலுக்கு மாற்றினார். 35 ஆண்டுகள் பயிற்சியாளராக செயல்பட்ட மைக்கேல் வாசல்தான் அதிகபட்சமாக வட இந்தியாவரையாவது சென்றுவிட வேண்டுமென்ற  நினைத்த கிருஷ்ணாவை அமெரிக்கா வரை போக வைத்தார்.

(National Collegiate Athletic Association ) NCAA  நடத்திய போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 1100 பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணா  போட்டியில்  சிறப்பாக விளையாடி  ‘பெண்கள்’ வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு  தகுதி பெற்றுள்ளார். கிருஷ்ணா NCAA டிராக் அண்ட் ஃபீல்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை  பெற்றுள்ளார்.

Latest Slideshows