அனைத்து தேவைகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் National Common Mobility Card

National Common Mobility Card For All needs and services :

அனைத்து சேவைகளுக்கும் ஒரே கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் National Common Mobility Card நடைமுறை பயன்பாட்டிற்கு வர உள்ளது. மத்திய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் (Union Ministry Of Urban Housing And Urban) ஆனது ‘ஒரு தேசம், ஒரு அட்டை’ (NCMC – National Common Mobility Card) என்று உருவாக்கியுள்ளது. மக்கள் ஒரே கார்டு மூலம் தங்களது அனைத்து வகையான தேவைகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் கட்டணம் செலுத்த பயன்படுத்தும் விதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC – National Common Mobility Card) ஆனது பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC – National Common Mobility Card.) ஆனது பேருந்து தொடங்கி மெட்ரோ வரையிலான பயணக் கட்டணம், டோல் டாக்ஸ், பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றை ஒரே கார்டு மூலம் செலுத்த உதவும்.

இந்த நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (NCMC – National Common Mobility Card) ஆனது பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பிற வங்கிகள் உட்பட 25+ பார்ட்னர் வங்கிகளிடமிருந்து டெபிட் / கிரெடிட் / ப்ரீபெய்ட் ரூபே கார்டுகளாக கிடைக்கும். பணம் செலுத்துவதற்கும், பணத்தை திரும்பப் பெறுவதற்கும் மற்றும் மற்ற கட்டணங்களை செலுத்துவதற்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்த முடியும். மேலும், கடைகளில் பொருட்கள் வாங்கவும், ATM-மில் பணம் எடுக்கவும், இந்த அட்டையை பயன்படுத்தலாம். எந்த KYC-யும் இல்லாமல் 3000 ரூபாய் வரை இதில் பயன்படுத்த முடியும் என்று RBI அறிவித்துள்ளது. 2019-லேயே இந்திய நாட்டில் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் தேசிய பொது இயக்க அட்டை (NCMC) ஆனது பல பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் இதை பெரிய அளவில் பயன்படுத்தாததால் இப்போது அரசு இதன் விதிகளில் தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.

இனிமேல் ரூபாய் டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ரூபே கார்டு செயலியின் (Rupay Card App) மூலம் NFC Enabled (Near Field Communication) ஸ்மார்ட்போனை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அதாவது ஒரு அட்டையை வைத்துக் கொண்டே பண பரிவர்த்தனைகளையும் செய்யலாம். மக்கள் NCMC அட்டையைப் பெற தங்களது வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த அட்டையின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏடிஎம்மில் பயன்பாட்டில் 5% கேஷ்பேக் தரும், மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது வணிக விற்பனை நிலையங்களில் பணம் செலுத்துவதில் 10% கேஷ்பேக் கிடைக்கும்.

Latest Slideshows

Leave a Reply