National Education Policy: தமிழ்நாட்டில் அமல்படுத்த தீவிரம் காட்டும் ஆளுநர்...

மாநிலங்களைப் பொறுத்தவரை ஒரு சில திட்டங்களை அமல்படுத்துவதற்கு மாநிலங்களின் ஒப்புதல் அவசியம். அதேபோன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில திட்டங்களில் மாநிலத்தின் ஒப்புதல் அவசியம் இல்லை. இதனால் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் நடந்த பிரச்சனைகள் ஏராளம்.

National Education Policy :

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதனை இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிலையங்களில் அமல்படுத்துவதற்கு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு கடந்த சில வருடங்களில் இருந்து ஆர்வம் காட்டி வருகிறது மத்திய அரசு. இதனை அமல்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்டாலும் தமிழ்நாடு இதை மறுத்து வருகிறது. ஒரு சில மாநிலங்கள் இதனை அங்கீகரித்து விட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இதனை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி அவர்கள் இதை அமல்படுத்த உறுதியாக உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் ரவி அவர்கள் இந்த தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு எவ்வளவு தயாராக உள்ளோம் என்பதை தெரிந்து கொள்ள தனியார் பல்கலைக்கழக வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டம் கடந்த இருபதாம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர்கள் ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பல்வேறு வகையான பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேசிய கல்விக் கொள்கையை அவர்களின் பல்கலைக்கழகங்களில் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பற்றி ஆளுநரிடம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் தங்களுடைய பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ள துணை வேந்தர்களுக்கு ஆளுநர் நன்றி கூறினார். தேசிய கல்விக் கொள்கை என்பது ஒன்றும் தவறான கொள்கை அல்ல என ஆளுநர் கூறினார். இது சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட கொள்கை. அது மட்டுமல்லாமல் புரட்சிகரமான மாற்றத்திற்கு மிகவும் ஏற்றத்தக்க ஒன்று. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வகையான தொழில்நுட்ப புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் தமிழ் மொழியிலேயே மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறினார்.

அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தை தொழில் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முன்னிலைப்படுத்துவதற்கான சிறப்பான வழியும் இதுவாகும். இந்த சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துமாறு அறிவுரை கூறினார். எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் நாட்டின்  விடுதலைக்காக போராடி உள்ள வீரர்களை பற்றி நாம் இன்னும் முழுதாக அறியவில்லை. அவர்களை கண்டறிந்து அவர்களின் பங்களிப்பை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமையாகும் என்று ஆளுநர் கூறினார்.  இதை தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கையை தற்போது தமிழகத்தின் ஆட்சியில் உள்ள தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இதனால் மீண்டும் தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அமுதரசன் பேட்டி:

இது தொடர்பாக தமிழக மாணவர் அணி துணைச் செயலாளர் அமுதரசன் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கையை தமிழக எப்போதும் எதிர்த்து கொண்டு தான் இருக்கும். இதனால் மாநிலத்துக்கு என்று தனியாக ஒரு கல்வி கொள்கை அமைக்கும் குழுவை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இது அனைத்தும் அறிந்தும் கூட ஆளுநர் அவர்கள் தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களில் அறிமுகப்படுத்த தீவிரமாக உள்ளார். 

Latest Slideshows

Leave a Reply