National Roller Skating Championship : ரோலர் ஸ்கேட்டிங்கில் தமிழக மாணவி பதக்கம் பெற்றுள்ளார்

National Roller Skating Championship - கோயம்புத்தூரை சேர்ந்த 8 வயது சிறுமி மேஹா சாதனை படைத்தார் :

சென்னையில் 61வது RSI நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி (National Roller Skating Championship) ஆனது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை நடைபெற்றது. இந்த ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி மேஹா தேசியப் பதக்கம் வென்றுள்ளார்.

ரோலர்-ஸ்கேட்டிங் :

ரோலர்-ஸ்கேட்டிங் ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் போட்டி விளையாட்டு ஆகும். இந்த போட்டி விளையாட்டில் பங்கேற்பவர்கள் சிறிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு காலணிகளை அணிந்து நடைபாதை பரப்புகளில் நகர பயன்படுத்துகின்றனர். ரோலர்-ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் ஸ்பீட் ஸ்கேட்டிங், ஹாக்கி ஸ்கேட்டிங், ஸ்கேட்டிங் நடனப் போட்டிகள் மற்றும் ஐஸ்-ஸ்கேட்டிங் போன்ற போட்டிகள் அடங்கும். ரோலர்-ஸ்கேட்டிங் விளையாட்டுகள் 1970 களில் பரவலாக பிரபலமடைந்தது. 1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் போது, வெளிப்புற மற்றும் உட்புற இன்லைன் ஸ்கேட்டிங் பிரபலமடைந்தது. ரோலர் ஸ்கேட்டிங் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமடைந்தது. கோவிட் தோற்று நோய்களின் போது நன்றாக மீண்டும் பிரபலமடைந்தது.

மேஹா 2 வெள்ளிப் பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் :

National Roller Skating Championship : மேஹா இன்லைன் ஸ்கேட்டிங் பிரிவில் 7 முதல் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 500 மீட்டர் ரிங்க் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 1 லேப் ரோடு பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 1 லேப் ரிங்க் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 8 வயது சிறுமி மேஹா பெற்ற வெற்றி ஆனது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அதற்கு கடின பயிற்சி தேவைப்பட்டது என்றும், இந்த பதக்கத்திற்காக மேஹாவுக்காக 2 வருட கடின உழைப்பை எடுத்துள்ளோம் என்றும் அவரது பயிற்சியாளர் ராகுல் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பயிற்சியாளர் ராகுல் பாண்டியன், “தற்போது மேஹா கோவையில் V.O.C ஸ்கேட்டிங் மைதானத்தில் என்னுடன் பயிற்சி பெற்று, எதிர்காலத்தில் சர்வதேச பதக்கத்தில் பெருவதில் கவனம் செலுத்தி வருகிறார்” என்றார்.

Latest Slideshows

Leave a Reply