Naval Palam Benefits In Tamil : நாவல் பழமும் அதன் நன்மையும்!

அறிமுகம்:

நாவல் பழம் மரம் பல்வேறு அற்புதங்களும் மருத்துவக்குணமும் நிறைந்த மரமாகும். இது தமிழகத்தில் அதிகமாக சித்தர்களால் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட பழங்களுள் நாவல் பழமும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் விளையும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகாலப் பழமாகும். இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பருவத்திற்கு ஏற்ற சுவையையும் நமக்கு வழங்குகிறது.

இந்த நாவல் பழம் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது மற்றும் நம்முடைய அனைத்து உடல் நல பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதன் பழம், விதை, இலை, பட்டை, வேர் என அனைத்தும் சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல்பழம் தினமும் நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாவல் பழத்தில் உள்ள விட்டமின்கள்:

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், மெக்னிசியம், போன்ற எண்ணற்ற விட்டமின்கள் நிறைந்துள்ளன.

நாவல் பயத்தின் மருத்துவ பயன்கள் :

Naval Palam Benefits In Tamil : இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நாவல் பழத்தில் குறைவான கலோரிகள் இருப்பதால் பாதுகாப்பாக சாப்பிடலாம். கூடுதலாக, நாவல் பழம் உள்ள “பாலிபினோலிக்” என்னும் ஒரு நொதி நீரிழிவு சிகிச்சையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

Naval Palam Benefits In Tamil : இதய ஆரோக்கியத்தின் அற்புதம் :

நாவல் பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டு மற்றும் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

Naval Palam Benefits In Tamil : எலும்பு ஆரோக்கியம் :

நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு கட்டமைப்பின் முக்கியமனா கூறுகள் ஆகும். இது எலும்பு அடர்த்தியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

Naval Palam Benefits In Tamil : செரிமான ஆரோக்கியம் :

நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை பலப்படுத்தவும், மலச்சிக்கல், வாயு, தசைப்பிடிப்பு, வயிற்றுப் போக்கு, போன்ற செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளைத் தடுக்க நாவல் பழம் உதவுகிறது.

மேலும் நாவல் பழத்தில் உள்ள வைட்டமின் சி செரிமான அமைப்பு தொடர்பான செல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுத்து செரிமான மண்டலத்தை காக்கிறது.

Naval Palam Benefits In Tamil : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

நாவல் பழத்தில் எராளமான வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக வைத்து வலுப்படுத்தவும் உங்கள் உடலின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.

Naval Palam Benefits In Tamil : மலட்டுத்தன்மைக்கு மருத்துவம் :

பெண்களில் சிலருக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க நாவல் மரத்தின் இலைகளை சாறு மற்றும் கஷாயம் செய்து தேன் அல்லது வெண்ணெய் கலந்து அளவாக சாப்பிட்டால் மலட்டுத்தன்மை முற்றிலுமாக நீங்கும் என சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது.

Naval Palam Benefits In Tamil : வாய் ஆரோக்கியத்தின் பராமரிப்பு :

நாவல் பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக நிறைந்துள்ளன, அவை வாய்வழியாக தொற்று மற்றும் பாக்டீரியாவிலிருந்து பற்களைப் பாதுகாக்கின்றன. உண்மையில், நாவல் பழம் பற்களின் ஈறுகளை வலுப்படுத்த பயன்படுகிறது மற்றும் அதன் இலைகள் துவர்ப்புத்தன்மை கொண்டவை, இது தொண்டை பிரச்சனைகளுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.

குறிப்பு :

நாவல் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் குடிக்கவும் கூடாது. முக்கியமாக நாவல் பழத்தை மிகைப்படுத்தாதீர்கள். நாவல் பழம் குளிர்ச்சி தன்மையுடையது அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

Latest Slideshows

Leave a Reply