Nayanthara Buys 50 Year Old Theater: சென்னையில் பிரபல தியேட்டரை வாங்கிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா ஆவார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றை வாங்கி, அங்கு புதிய மல்டிபிளக்ஸ் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்துள்ளார். இந்தப் படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் மூலம் சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை பல்வேறு துறைகளில் முதலீடு செய்து நடிகையாக மட்டுமின்றி தொழிலதிபராகவும் ஜொலித்து வருகிறார் நயன்தாரா.

இவர் நடிப்பை தாண்டி தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரெடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். லிப் பாம் என்ற அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள நயன்தாரா, சாய் வாலே என்ற டீக்கடை தொழிலிலும் அதிக அளவு முதலீடு செய்துள்ளார்.

இப்படி பல தொழில்களை செய்து வரும் நயன்தாரா தற்போது தியேட்டர் தொழிலிலும் அடியெடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வடசென்னை பகுதியில் இயங்கி வந்த பழமையான அகஸ்தியா தியேட்டரை நடிகை நயன்தாரா விலைக்கு வாங்கியுள்ளாராம். அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றினை கட்டுவதற்கு நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் புதியதாக தியேட்டர் வாங்கியுள்ள நயன்தாராவுக்கு தற்போது திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply