Nayanthara Talks About Menstrual Awareness : மாதவிடாய் ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும்

“மாதவிடாய் ஆரோக்கியத்தைப் பற்றி பல பெண்களுக்கு இன்னும் விழிப்புணர்வே இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களும் அதை வெளிப்படையாகப் பேச வேண்டும்” என்று நடிகை நயன்தாரா (Nayanthara Talks About Menstrual Awareness) சேலத்தில் கூறினார்.

தமிழ் சினிமா உலகில் மிக முக்கியமான கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவை நயன்தாராவுக்கு முன், நயன்தாராவுக்குப் பின் என்று பிரிக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வரும் அவர், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பெண்களை கதையின் மையமாக வைத்து பல படங்கள் வெளிவர ஆரம்பித்தன. நயன்தாராவின் அறம் முதல் அன்னபூரணி வரை, பெண் முன்னணி கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நைன் எனப்படும் அழகு சாதனப் பொருட்களின் நிறுவனத்தை தொடங்கினார். லிப்ஸ்டிக், பியூட்டி க்ரீம், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி அதற்கான விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார்.

Nayanthara Talks About Menstrual Awareness :

நடிகை நயன்தாராவின் பெமி 9 நிறுவனத்தின் வெற்றி விழாவானது, சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நீயா நானா கோபிநாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா, உங்கள் அனைவரின் முன் நிற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த பெருமைக்கு நீங்கள்தான் காரணம். எனது சுயநலத்திற்குப் பின்னால் பொதுநலன் இருக்கிறது. எனவேதான் சானிட்டரி நாப்கின் நிறுவனத்துடன் இணைந்துள்ளேன். எங்களுக்கு ஒரு சமூக பொறுப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், மாதவிடாய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இன்னும் பெண்கள் சானிட்டரி நாப்கின்களின் பெயரைக் கூறக்கூட தயங்குகின்றனர். இந்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும். பெண்களுக்கு நாப்கின்களுக்கான புரிதல் வந்துவிட்டால், அவர்களை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அதற்கு தேவையான சுகாதாரமான நாப்கின்களை    பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் எங்களின் நோக்கமாகும். எங்கள் நிறுவனத்தின் முதல் நோக்கம் பெண்கள் ஆரோக்கியம் ஆகும். பெண்கள் நலமாக இருந்தால் சமூகம் நன்றாக இருக்கும். அவர்களின் குடும்பம் நன்றாக இருக்கும். இதுவரை ஒரு கோடி நாப்கின்களை எங்களது நிறுவனம் மூலமாக விற்பனையாகியுள்ளது. இதற்கு நீங்கள் தான் காரணம், உங்களால் தான் இதனை செய்ய முடிந்தது.

தொடர்ந்து பேசிய அவர், எப்போதும் நமது காதுகளில் கேட்கும் ஒரே விஷயம், ஒவ்வொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்கள் என்பதுதான். ஆனால் தற்போது வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியாக உள்ள அனைத்து பெண்களுக்கு பின்னால் நிச்சயமாக ஒரு ஆண் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நான் செய்யும் சில விஷயங்களில், சினிமாவை தவிர்த்து எனது கணவர் விக்னேஷ் சிவன், நான் இன்னும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுகிறாரே தவிர, எதற்காக நீங்கள் இதை செய்கிறீர்கள் என்று ஒரு நாளும் கேட்டதில்லை. இதற்கு முன்பாக யாரும் நம்மை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுவே பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அதிகம் தகுதி உடையவர் என்றும், ஏன் இதோடு நிறுத்த வேண்டும் என்று ஒரு கேள்வியை கேட்பவர் தான் எனது கணவர் விக்னேஷ் சிவன்.  இதனை நான் எந்த மேடையிலும் பேசியதில்லை, அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததில்லை என உற்சாகத்துடன் நயன்தாரா (Nayanthara Talks About Menstrual Awareness) தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply