Nayanthara Won The Dadasaheb Phalke Award : நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பாலிவுட்டுக்கு சென்று முதல் படத்திலேயே தனது தரமான நடிப்பை வெளிப்படுத்திய நயன்தாரா நேற்று நடைபெற்ற தாதாசாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை (Nayanthara Won The Dadasaheb Phalke Award) வென்றார். நயன்தாரா விருதுகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜவான் ஆகும். செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஜவான் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்பட்டது. அட்லீ வழக்கம் போல் பல படங்களை கதையில் கலக்கியிருந்தார். பாலிவுட் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். ஜவான் ரூ.1000 கோடியை தாண்டியுள்ளதாக ரெட் சில்லி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000 கோடி இலக்கை 17 நாட்களில் எட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக சண்டை போட்டு நயன்தாரா பில்லா படத்துக்கு பிறகு மிரட்டியிருந்தார்.

Nayanthara Won The Dadasaheb Phalke Award :

இந்நிலையில், நயன்தாரா மற்றும் ஷாருக்கானை பிலிம்ஃபேர் விருதுகளில் கண்டுகொள்ளவில்லை. ஷாருக்கான், நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தாதாசாகேப் பால்கே திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான், அட்லீ, நயன்தாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலிவுட் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க விருது வழங்கும் விழாவான தாதாசாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது (Nayanthara Won The Dadasaheb Phalke Award) வழங்கப்பட்டது. ஆலியா பட், தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரைத் தொடர்ந்து நயன்தாரா தனது முதல் பாலிவுட் படத்திலேயே விருதை வென்றுள்ளார். பாலிவுட் நடிகரும் ஜவான் படத்தின் ஹீரோவுமான ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. மேலும், நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாராவிடம் விருதை வழங்கிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனக்கு கிடைத்த தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுடன் (Nayanthara Won The Dadasaheb Phalke Award) எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், “ரொம்ப பிரிட்டி” என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.  தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதை பெற்ற நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாதாசாகேப் பால்கே விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆசிர்வதிக்கப்படுவதாகவும் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply